கவிதை தொகுப்பு 63

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக அன்புத்தமிழ் அவர்ககளின் கவிதை தொகுப்பை வாசிக்கலாம் – kavithai thoguppu 63

Kaathal kavithai thoguppu

நம்பிக்கை நட்சத்திரம்…

உன்னை
” நம்பி “
உன் ” கை ” யால்
எதையும்
துணிந்துசெய்.!!

உன் ” நம்பிக்கையும் “
உன் ” கையும் “
இணைந்து
புது ” நம்பிக்கையாய் “
புது உலகமே படைப்பாய்

இவ்வுலகிற்கே நீதான்
” நம்பிக்கை “
நட்சத்திரமாவாய்.!!!


தவறில் தலைநிமிர்..

தவறை
தவறாய் செய்து.,
தவறில்
தவறை
உணர்ந்து.?!
தவறில்
தவறைக் கொண்டு.?! இனி

தவறியும்
தவறாமல்.,
தவறில்
தடுமாறாமல்.,
தலைநிமிர்ந்து.?!?
தன்மானத்தோடு – நம்
தலைமுறையை வாழ்வைப்போம்.!!!


குழப்பான வாழ்வு

தெரிந்த வாழ்க்கையில்.,
தெரியாமல் வாழ்கிறோம்.?!

நமக்கான வாழ்க்கை என
நம்பிக்கையில் தான் வாழ்கிறோம்.?!

இது நமக்கான வாழ்க்கையா.?!
இல்லை

இது நமக்கானது அல்ல.?!

யாரோ இருவரின் ஆசையில்.,
யாருக்கும் தெரியாமல் வந்தோம்.?”

நமக்கானது என்ற நம்பிக்கையில்
நாடகத்தில் நடிக்கிறோம்.?!

நமக்கான வாழ்க்கையை
நம்மவர்களுக்காகவே வாழ்கிறோம்.?!!

எனக்காக வாழ்கிறேன்
என்று பொய் பேசி செல்கிறோம்.?!

இருக்கும் வாழ்க்கை புரிவதில்லை.??
இல்லாத வாழ்க்கையை விட மனமில்லை.?!!

நமக்கு என்று வாழ்க்கை இருப்பதில்லை.??
நமக்கான வாழ்க்கை நமக்கனதில்லை.??

எனக்கென்ற வாழ்வு இங்கில்லை
என்ன வாழ்க்கை இது விளங்கவில்லை.??

யாருடைய வாழ்க்கையிது.?!!
யாருக்கான வாழ்க்கையிது.?!!

என்னுடைய வாழ்க்கையில்
எனக்கில்லாமல்.?!!
யாருக்காக வாழ்கிறோம்.!!


தோல்வியை நேசி…

தோல்விக்கு என்னை பிடிக்கும்.?!!

என்னை யாருக்கும் பிடிக்காத நேரத்தில்.??!

என்னுடனே எனை பிடித்து
என் அருகில் இருந்ததால்.?!!

தோல்வியை எனக்கும் பிடிக்கும்.!!?!

தோல்வி எனக்கு பிடிக்காத
வார்த்தை.?! – அன்று

இன்று நான் ரசிக்கும்..,
வார்த்தைகளில்..! – ஒன்று

என் தந்தைக்கு பின்..,
என் உயிர் நண்பனுக்கு பின்…,
என்னை எனக்கே
நான் யாரென..?
எடுத்துகாட்டியது என் முதல்
தோல்வி..!!

தோல்வி நம்மை
தேடி வருவதில்லை.?!!

நாம் செய்த தவறின் பரிசே
தோல்வி..?!!
இந்த தோல்வி தொடர்ச்சியல்ல.?!!
நாம் இன்னும்
செய்ய வேண்டிய முயற்சியே.?!!

நம் செயல்கள் சரியானால்..!?!
நம் செயல்களில் ஒரு வெறி உருவானால்..?!
இந்த தோல்வி உருமாறும்..!!
என்றும் வெற்றி உனதாகும்..!!!
உலகம் உன் வசமாகும்.!!!

தோல்வியையும்.,
நேசி.!!!

தோல்வியும் – உன்னை
நேசிக்கும்.!!

வெற்றியை மட்டும்
உனதாக்கி.!!?!


நாமே உதாரணம்…

நாளை என்று ஒன்று
நிச்சயம் வரும் மறவதே
நண்பா.??! இன்று
நாம் செய்வதை
நாளை நமக்கும்
நம்பிள்ளைகள்
நிச்சயம் செய்வார்கள்
நம் இரத்தம் அல்லவா.?!!

நல்முறையில்
நம் பெற்றோர்களை
நாம் கவனித்தால் நம்மையும்
நம்பிள்ளைகள்
நன்றாக பார்ப்பார்கள் அவர்களுக்கு
நாமே வாழ்க்கை உதாரணங்கள்
நடித்து வாழக்கற்றுத்தராமல்
நல்லவனாய்., நல்விதமாய்
நாளைய எதிர்காலத்தை
உருவாக்குவோம் – kavithai thoguppu 63

– ரா. அன்பு தமிழ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *