செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை
விலகி ஒளிரலாம் ஆனால்
நான் உன்னை என்றும் வெளிச்சத்தில்
தாங்கி நிற்பேன் அன்பே.

உன்னை விழி எனலாம்,
வாழ்வு ஒளி எனலாம்.

வெளிப்பாடு தெரியாத அன்பை
ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும்
நீ தான்.

chella manaivikkum selva magalukkum

துயில் எழுப்பும் குயிலும் நீதான் !
தூங்க வைக்கும் தாலாட்டும் நீ தான் !
தூர் வான பனிச்சாரலும் நீ தான்.

நிகழ்கால நெட்டிசங்களை விட
மனதை ஆக்கிரமிக்கும் நேரப்பொழுதும் நீ தான்.

காற்றில் பறக்கும் சிட்டுக் குருவிகளையும்,
காற்றலையில் வரும் ட்விட்டர் குருவிகளையும்,
வெல்லும் உன் பூமுகப் புன்னகை.

தத்தித் தவழும் பருவம் முதல்
தள்ளாடும் வயது வரை, உன்னை
நேசிக்காத உள்ளமுண்டோ?

செல்லத் துணைவிக்கும்
செல்வ மகளுக்கும் சமர்ப்பணம்.

வாழ்வை அர்த்தமக்க வந்தவளுக்கும்,
அர்த்தமாக்கி வந்தவளுக்கும் சமர்ப்பணம்.

 – நீரோடை மகேஷ்

You may also like...

2 Responses

  1. Pavithra says:

    Arumai pathiviruku nanrikal pala

  2. dhanalakshmi says:

    Very pleasant and pleasing!