நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்

நவராத்திரி பெருவிழா

அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜை மற்றும் இரவில் அம்பிகை பூஜை செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது navratri vijayadashami sirappu.

சிவனை வழிபட தகுந்த விழா சிவராத்திரி, சக்தியை வழிபட தகுந்த விழா நவராத்திரி. நவராத்திரி சமயங்களில் அம்பாள் ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதாக சொல்லப்படுகிறது, அச்சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளை தைக்க கூடாது என்பது உறுதியான கட்டுப்பாடாக பின்பற்றப்படுகிறது. புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

“முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு” – துர்க்கை (மகேசுவரி, கௌமாரி, வராகி)

“அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி வழிபாடு” – இலட்சுமி (மகாலெட்சுமி, வைஷ்ணவி,இந்திராணி)

“கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு” – சரஸ்வதி (சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி)

navratri vijayadashami sirappu

புராணங்கள் என்ன சொல்கின்றன

ராமாயணத்தில் வாலமீகி ராமன் ராவணனுடன் போரிட தகுந்த நாளாக புரட்டாசி தசமி அதாவது விஜய தசாமியை குறிப்பிட்டதாக குறிப்பு உண்டு. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள், நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குபாத்திரமானவர்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாட்டு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகளுக்கு கல்வியும், கன்னிகளுக்கு திருமண சுபா நிகழ்வுகளும் கிடைக்கும் என்பது சிறப்பு. நவராத்திரி பூஜையின்போது வெறும் மாவினால் கோலமிடுவதை விட கட்டாயம் செம்மண் கலந்து கோலமிட அம்பாள் மனமிரங்கி வருவாள் என்பது ஐதீகம்.

நவராத்திரி விழாவில் இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்வதாககருதப்பட்டு இரவு நேரத்தில் தான் கொண்டாடப்படும். நவராத்திரி விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகையாகும். நவராத்திரியில் ஒன்பது நாளும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாம்பூலம் வழங்கி வழிபட உறவுகள் மேம்படும் என்பது சிறப்பு. குழந்தைகளிடம் மனித நேயம் வளர பாலமாக நவராத்திரி அமைகிறது.

விஜயதசமி

ஒன்பது நாட்கள் மகிஷன் என்ற அசுரனுடன் (மகிஷாசுரன்) போரிட்ட தேவி (அன்னை பராசக்தி), பத்தாம் நாள் அசுரனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தரும் நாள் என்று கொண்டாடப்படுகிறது. அசுரனுடன் போரிட்டு வதைத்த தேவி சக்தியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் விஜய தசமி.

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாள் விரதம் இருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வணங்குபவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அன்னை விஜயமளிக்கும் நாளே ‘விஜயதசமி’ எனவும் கூறப்படுகிறது. நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாளான மகாநவமி அன்று தொழில்களையும், கல்வியையும் மற்றும் கலைகளை போற்றும் விதமாகவும், அடுத்த நாள் வெற்றித்திருநாளான விஜயதசமி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    Arumai….Golu PADI pathi ethum solla mudiuma sonna useful ah irukum….