விகாரி தமிழ் வருடம் ஒரு சிறப்பு பதிவு

நீரோடை வாசக சொந்தங்களுக்கு விகாரி தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருடங்கள் (பிரபவ வருடத்தில் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடியும்) அறுபது வருடங்களில் 33 வதாக வரும் மங்களகரமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி ஏழு நிமிடத்தில் (14-04-2019 அன்று) பிறக்கிறது vikari varudam tamil new year.

ஆண்டு பலன்

  • பருவ மழைக்கு குறையில்லாத விகாரி வருடத்தில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.
  • தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வருடமாகும். மருத்துவ செலவு வர வாய்ப்புள்ளதால் மக்கள் இயற்க்கை உணவை எடுத்துக்கொள்வது நல்லது.
  • குல தெய்வ வழிபாடும், சித்தர்கள் வாழ்ந்த மற்றும் தவம் செய்த தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருதல் கூடுதல் நன்மை கொடுக்கும்.
  • இந்த வருடம் லக்கினாதிபதி சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் உத்தமம்.
  • தேவையற்ற விவாதங்கள் மக்கள் மத்தியில் குறையும்.
  • விளையாட்டு துறை கோப்பைகளை வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் அடையும்.
  • அண்டை நாடுகளால் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.
  • தங்கம் விலை திடீர் ஏற்றம் இரக்கம் நிலவும்.
vikari varudam tamil new year

சித்திரைக்கனி (கனிகாணல்)

தமிழ் வருட முதல் நாளான சித்திரை முதல் நாளில் கனிகாணல் (சித்திரைக்கனி)  பெரும்பாலான கோவில்களிலும், வீடுகளிலும் பின்பற்றப்படும் வழக்கமாகும். கோவில்களிலும், வீடுகளிலும் கனிகளை அலங்கரித்து வைத்து வீடு என்றால் காலை எழுந்தவுடன் அதில் விழிப்பது வழக்கம். மா, வாழை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற கனிகளில் 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை பாக்கு தேங்காயுடன் வாழை இலையில் வைத்து கனி காண்பது பண்பாடு. இவற்றை முதல் நாளே பூஜை அறையில் வைத்து சித்திரை முதல் நாள் காலையில் விழிக்க மங்களம் நிலவும், பொன் பொருள் சேரும், கலைமகள் குடியேறி துஷ்ட தேவதை விளங்குவாள் என்பது நம்பிக்கை vikari varudam tamil new year.

கைநீட்டம்

சித்திரை முதல் நாளில் பெரியவர்களிடம் ஆசி பெற்று நாணயம் பெறுவதும், கோவில்களில் கனி மற்றும் நாணயம் வழங்குவது காய் நீட்டம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு பெற்றால் ஆண்டு முழுவதும் பொன் சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


You may also like...

1 Response

  1. Rajan says:

    Happy Tamil New Year