தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal

thai matha minnithaz

மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே சொடுக்கவும் (Click here to view Rangoli participants)

கலந்துகொண்ட கோலங்கள்

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம்…!

இலவங்கத்தை இடித்து பொடி செய்து அரை கிராம் அளவு காலை, மாலை இருவேளை தேனில் குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம் ஏற்படும். இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர்.
இது தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால், தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

இலவங்கப்பொடியை 2 கிராம் அளவு எடுத்து பனைவெல்லத்தில் கலந்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரச் சிக்கலும் அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்தும்.

இலவங்கப்பூ பொடியை பற்பொடியுடன் சிறிதளவு சேர்த்து பல்தேய்த்து வர வாய்நாற்றம், பல்வலி, ஈறுவீக்கம் முதலியவை குணமாகும். இவை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.

பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம் – thai matha ithal.

பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம். சிறுநீர் உபாதை, சிறுநீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.

பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.


உழவன் எம் தலைவன் – வீழ்வேனென்று நினைத்தாயோ

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.. இங்கு உண்டு களித் திருப்போரை நிந்தனை செய்வோம்…”
மலர் பள்ளி இலக்கிய மன்றக் கூட்டத்தில் தன் பேச்சை முடிக்க.. அனைவரும் கைத்தட்டினர். ‘உழவின் பெருமையை, மேன்மையை, எடுத்துக்கூற இதைவிட அருமையான பேச்சு இருக்க முடியாது’ என்று அனைவரும் சிலாகித்தனர்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மலர்விழி படிப்பதோ பத்தாம் வகுப்பு ,ஆனால் அவளுடைய ஆழ்ந்த ஞானம் அவளுக்கு கடவுள் கொடுத்த வரம்.ஆசிரியர்களும் சக மாணவர்களும் பாராட்ட, எல்லோருக்கும் நன்றி கூறி விட்டு வெளியே வந்தாள்.

” அம்மா இன்னைக்கு என் பேச்சு ரொம்ப அருமையா இருந்துச்சுன்னு எல்லோரும் பள்ளிக்கூடத்துல பாராட்டினாங்க. இங்க பாரு.. மகாகவி பாரதியார் படம் கூட கொடுத்திருக்காங்க பரிசா..”

பரபரப்பாக இருந்த பூவாயி,
” சரிடி! பள்ளிக்கூட கதையே பேசிகிட்டு இருக்காத, வயக்காட்டுக்கு… கூட வர்றியா” என்றாள்.

“நீ போம்மா.. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றாள் சலிப்போடு.

“பெரியவூட்டு தோட்டத்துக்குப் போய் அம்மா கிட்ட கேட்டுட்டு கொஞ்சம்காஞ்ச சுள்ளிகளா பார்த்து புறக்கிட்டு வா…விறகெல்லாம் ஈரமா இருக்கு.. அடுப்பெரிக்க சுள்ளி வேணும்.அப்பத்தான் ராவுக்கு கஞ்சினாச்சும் வைக்க முடியும்”.

மலர்விழி யோசித்தாள்… ‘ஊருக்கெல்லாம் உணவு தானியத்தை விளைவிக்கிற விவசாயி குடும்பத்தில் மட்டும் ஏன் இந்த கஷ்டம்,படிக்க ஆர்வமா இருந்தாலும், படிக்க வைக்கிறதுக்குள்ள அப்பாவும் அம்மாவும் படுறபாடு..போன முறை ஸ்கூல் ஸ்கூல் பீஸ் கட்ட புள்ள மாதிரி ஆசையாய் வளர்த்த லஷ்மி
பசுவை வித்திட்டாரு…விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போகவும் அப்பா பிரிய படல .என்னால தான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இவ்வளவு கஷ்டம்…’ மனச்சுமை அவளை அழுத்தியது.ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது.

இருள் மெல்ல கவிய… தங்கத் தகடாய் முழுநிலா வானில் எழுந்தது… குளிர்ந்த காற்று வீச… படித்துக்கொண்டிருந்த மலர் மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது…

வயக்காட்டிலிருந்து உள்ளே வந்த மாடசாமி கைகால்களை கழுவிக்கொண்டு, மகள் அருகில் வந்து உட்கார்ந்தார்.

“என்னடா கண்ணு! இன்னும் படிச்சு முடிக்கலை? சாப்பிட்டியாடா தங்கம்?

“அம்மா கஞ்சி கொடுத்துச்சு…”

“ஏண்டா உனக்கு நெல்லுச் சோறாக்கி போட சொல்லி உங்க அம்மா கிட்ட காசு கொடுத்துட்டு போனேனே..”

“அது பால்காரன் பாக்கிக்கு சரியா போயிடுச்சு! அவன் கத்தினதால அந்த பணத்தை அவங்கிட்ட கொடுத்து புட்டேன் ” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் பூவாயி.

“அப்பா!ஏம்பா நமக்கு இந்த கஷ்டம்? நாம வேற ஏதாவது தொழில் பண்ணியிருந்தா இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாம்ன்னு தோணுதுப்பா”.

‘மலர்.. நாம விவசாயம் செய்வதில பெருமைபடணும் .எப்பேர்பட்ட தொழில் செஞ்சாலும், பணம், காசு, வசதியத்தான் கொடுக்க முடியும் .அது இல்லாமலோ, இருக்கறத வச்சோ வாழ்ந்திடலாம் ஆனால் சாப்பிடாம ஒரு வேளை இருக்க முடியாது. அப்படிப்பட்ட சாப்பாட்ட நாமதான் உற்பத்தி பண்ணி மக்களுக்கு கொடுக்கிறோம். அதனால இந்த தொழில்ல இருக்கற பெருமையும், அந்தஸ்தும் , வேறு எந்த தொழிலுக்கும் கிடையாது. என்ன…நாம உற்பத்தி பண்ற பொருளுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய விலை கிடைக்க மாட்டேங்குது.. இது தான் வருத்தம்” – thai matha ithal.

“உண்மைதான்ப்பா… நீங்க விவசாயத்தை எவ்வளவு நேசிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். ஏதோ ஒரு வருத்தத்துல நான் அப்படி சொல்லிட்டேன்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனை நான் சொல்கிறேன்… உங்களுக்கு சரின்னு பட்டா செய்வோம்”

“என்னம்மா சொல்லு! நீ படிக்கிற புள்ள! வேலை பார்க்கிறேன்… வயக்காட்டுக்கு வர்றேன்… அப்படின்னு சொல்றதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. எங்க கஷ்டம் எங்களோட போகட்டும். நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.”

“அப்பா எனக்கு படிப்பே சரியா இருக்கு… நான் இப்ப வயக்காட்டுக்கெல்லாம் வர போறதில்ல… நீங்க விளைவிக்கிற பொருள்களை தரம் பிரிச்சு, நாமே பேக் பண்ணி நமக்கு தெரிஞ்ச வீடுகளுக்கெல்லாம் விநியோகம் பண்ணுவோம். இயற்கை உரத்தை பயன்படுத்தி பண்ணுகிற விவசாயத்தைப் பத்தி எங்க பள்ளிக்கூடத்துல நிறைய பேசினாங்க… இயற்கையா விளைவிக்கும் காய்கறிகளுக்கு நல்ல மதிப்பு இருக்குப்பா… நாமே நேரடியாக விற்பனை பண்ணும் போது நமக்கு லாபமும் நல்ல கிடைக்கும்.”

மாடசாமி தன் மகளை பெருமையுடன் பார்த்தார். நீ சொல்றது ரொம்ப நல்ல யோசனைம்மா உன்னுடைய உதவி இருக்கறதால கண்டிப்பா நம்ம இதை வெற்றிகரமாக செய்ய முடியும்” என்றார் உற்சாகமாக.

“உங்களுக்கு உதவறது மட்டும் இல்லப்பா என்னுடைய குறிக்கோள். விவசாய கல்லூரில படிக்கணும். படிச்சவங்க நிறைய பேர விவசாயத்துக்கு வர வைக்கணும். அப்பத்தான் விவசாயத்தை நிறைய புது உத்திகளை பயன்படுத்தி, மேம்படுத்த முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே என்னுடைய பேச்சால இயற்கை உர விவசாயத்தை பண்ணுமாறு வலியுறுத்துவேன். நிறைய பேர இயற்கை உர விவசாயத்திற்கு வரவழைப்பேன்.என்னுடைய மேடைப் பேச்சுத் திறமை இதற்கு பயன்படும். ஒரு விவசாயியின் மகள் மற்ற எந்த தொழில் செய்பவர்களுக்கும் குறைந்தவளில்லை என்று நான் நிலைநிறுத்துவேன்” என்றாள் கண்களில் கனவுகளோடு… மனதில் உறுதியோடு…

மகளை பெருமையோடு அணைத்துக்கொண்டார் மாடசாமி.” நீ கண்டிப்பா சாதிப்ப மலர்” என்றார் பெருமையோடு.

மலர்விழியின் கண்கள் பரிசாக கிடைத்த பாரதியார் படத்தை நோக்கியது.’ சில வேடிக்கை மனிதரைப் போல், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..’ என்று கீழே எழுதியிருந்த வரிகள்.. அவளுக்கு புதிய தன்னம்பிக்கையை கொடுக்க… பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் புன்னகைத்தாள் மலர்.

– தி.வள்ளி, திருநெல்வேலி


சிவபெருமான் தலம் தொடர்புடைய ஆன்மீக அறிவு செய்திகள்

  1. விபூதி என்பதன் நேரடியான பொருள்… – மேலான செல்வம்
  2. சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்… – கஞ்சனூர்
  3. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? – 12
  4. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்…. – சுந்தரானந்தர்
    5.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்… – ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)
  5. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி…. – திலகவதி
  6. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்… – சேரமான் பெருமாள் நாயனார்
  7. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்… – வள்ளலார்
  8. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை…… – மங்கையர்க்கரசியார்
    10.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? – அரிமர்த்தனபாண்டியன்
  9. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்… – மகேந்திரபல்லவன்
    12.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் … – தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)
  10. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? – எட்டு
  11. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? – மாசி தேய்பிறை சதுர்த்தசி
  12. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? – 4 கால அபிஷேகம்
  13. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்….. – நமசிவாய
  14. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? – சிவாயநம
  15. சிவசின்னங்களாக போற்றப்படுபவை… – திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
  16. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? – அருவுருவம்
  17. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்…. – ராமேஸ்வரம்
  18. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்… – தட்சிணாமூர்த்தி
    22.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? – 12
    23.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்… – குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
  19. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்… – வில்வமரம்
    25.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி… – மானசரோவர்
    26.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? – 81
    27.பதிகம் என்பதன் பொருள்… – பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
  20. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்… –
    சிவஞானபோதம்
  21. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை…. – டமருகம் அல்லது துடி
    30.அனுபூதி என்பதன் பொருள்…. – இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
    31.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை….. – மதுரை மீனாட்சி
  22. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்….. – மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
  23. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்…. – தடாதகைப் பிராட்டி
  24. பழங்காலத்தில் மதுரை ….. என்று அழைக்கப்பட்டது – நான்மாடக்கூடல், ஆலவாய்
  25. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்… – கடம்ப மரம்
  26. மீனாட்சி…. ஆக இருப்பதாக ஐதீகம். – கடம்பவனக் குயில்
  27. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்…. – திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
  28. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்… – குமரகுருபரர்
    39.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்…. – மகாகவி காளிதாசர்
  29. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்… – சித்ராபவுர்ணமி
  30. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்… – ரோஸ் பீட்டர்
  31. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? – ஜுரகேஸ்வரர்
  32. “நாயேன்’ என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்? – மாணிக்கவாசகர்
    44.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்… – இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
  33. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்…. – சூலைநோய்(வயிற்றுவலி)
    46.அம்பிகைக்கு உரிய விரதம்…. – சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
  34. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்…. – தோணியப்பர்(சீர்காழி)
    48.தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்… – திருநாவுக்கரசர்
    49.”தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்…… – சுந்தரர்
    50.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்… – சேக்கிழார்

You may also like...

2 Responses

  1. Priyaprabhu says:

    கதை மிகவும் அருமை.. அருமை..💐💐

  2. N.sana says:

    Lavangathirku இவ்வளவு மருத்துவ குணங்களா…..தகவலுக்கு நன்றி நீரோடை