கமலமுனி சித்தர்

பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் கமலமுனி எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – kamalamuni siddhar

kamalamuni siddhar

குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் 4000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். கருவூராரின் சீடராக இருந்தார் என்று சிலர் சொல்வதுண்டு. இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் கற்று சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார்.

கமலமுனி முந்நூறு – ரேகை சாஸ்திரம்

“கமலமுனி முந்நூறு”, “ரேகை சாஸ்திரம்” முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது. பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் என பல பெயர்களில் குறிப்பிடுகிறார்.

நூல் அரங்கேற்றம்

சித்தர்களின் நூல்களை அரங்கேற்றம் செய்ய கமலமுனி சதுரகிரிக்கு வந்தார். மற்ற இடங்களில் அந்த நூல்களை வெளியிடாமல் சிலர் தடுத்ததால் சதுரகிரியில் வெளியிடும் எண்ணத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். ரோமரிசியை சந்தித்து நிகழ்ந்ததை கூற அவரும் எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று கூறி அரங்கேற்றம் முடிவு செய்யப்பட்டது.

ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள் ஒன்று கூடி வெளிச்சம் நிறைந்த குகையில் நூலை அரங்கேற்றம் செய்தனர். சில சமயம் தம்மைத்தாமே மறைத்து வைத்து தவம் செய்வார். மற்றவரிடன் கண்ணில் படாமல் மறைந்துகொள்வார்.

கமலமுனி நிகரற்றவர்

திருவாரூரில் தியாகராஜர் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக அருள் தருகிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். தமிழகத்திள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். கமலமுனி சித்தர் பீடம் அம்மன் மூலஸ்தானம் அருகே உள்ளது. சித்துக்களில் கமலமுனி நிகரற்றவர் என போகர் கூறுகிறார்.

போகர் ஜனை சாகரம்

காலாங்கிநாதர் சீன நாட்டில் சமாதி கொண்டிருப்பதாக பல இடங்களில் கூறியிருந்த போதிலும் போகர் ஜனை சாகரம் என்ற நூலில்,
“ஆதி என்ற சிதம்பரமே திருமூலரச்சு
அவருடன் பதினெண்பேரதிலே யாச்சு
சோதியென்ற காலங்கிநாதர் தாமும்
துலங்குகின்ற காஞ்சிபுரம் தண்ணிலேயாகும்”
என்று கூறுகிறார்.

சீன முதலியவனம் எங்கெங்கு சுற்றிய போதிலும் , சமாதிகள் இருந்தபோதிலும் கடைசியாக முக்தி அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது – kamalamuni siddhar.

You may also like...

5 Responses

 1. surendran sambandam says:

  கமலமுனி சித்தர் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

 2. உஷாமுத்துராமன் says:

  அருமை படிக்கும் போதே மெய் சிலிர்த்தது. 🙏🙏👏👏🙏🙏🙏

 3. Kavi devika says:

  சித்தர் பற்றிய ஆன்மீக கட்டுரை சிறப்பு

 4. Nachiyar says:

  வாழ்க வளமுடன்.. கட்டுரை மிக அருமை

 5. கதிர் says:

  பயனுள்ள அருள்கிட்டும் பதிவு.. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வாசிக்க காத்திருக்கிறோம்