சித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்
சித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின் நலன்களை மட்டும் மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.பிரசித்தி பெட்ரா பல தலங்களில் சித்தர்கள் சன்னதியை காண முடிகிறது. சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக போற்றப்படுகின்றன. சித்தர்களின் ஆலயத்திலோ, தவக்குகையிலோ அமர்ந்து தியானம் செய்வது நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை – சித்தர்கள் sithargal.
சித்தர்கள் sithargal
பழனிமலை முருகனை நவபாஷாணத்தால் வடிவமைத்து அங்கேயே ஜீவா சமாதி பெட்ரா போகரை பற்றி பெரும்பாலானோர் அறிவர். அது போல திருப்பதி மலை உலக பிரசித்தி பெற்ற தலமாக மாறியதற்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்து ஜீவ சமாதியான கொங்கணர் என்ற சித்தரே. கொங்கணர் அதற்க்கு முன்னர் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் தவம் புரிந்தார் என்பது வரலாறு.
சித்தர்களில் ஆதி முதல் முக்கிய சித்தர்கள் திருமூலர், இராமதேவர், அகஸ்தியர், கொங்கணர், கமலமுனி, சட்டமுனி, கருவூரார், சுந்தரனார், வான்மீகர், நந்திதேவர், பாம்பாட்டி சித்தர், போகர், மச்சமுனி, பதஞ்சலி, தன்வந்திரி, இடைக்காடர், குதம்பை சித்தர், கோரக்கர் ஆகியோர் ஆவார்கள்.
பதினெட்டு சித்தர்கள் மற்றும் தலங்கள்
அகத்தியர் – திருவந்தபுரம்
போகர் – பழனி
கொங்கணர் – திருப்பதி
திருமூலர் – சிதம்பரம்
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
கரூவூரார் – கரூர்
சுந்தரனார் – மதுரை
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
இடைக்காடர் – திருவண்ணாமலை
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்
கோரக்கர் – பொய்யூர்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
குதம்பை சித்தர் – மாயவரம்
சித்தர்களின் வரலாறு மற்றும் அவர்கள் இயற்றிய பாடல்கள் (செய்யுள்கள்) பற்றி வரும் கட்டுரைகளில் வாசிக்கலாம். சித்தர்களின் மூலிகை வைத்தியம் பிற்காலத்தில் சித்தவைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட பதினெற்று சித்தர்களூம் அளப்பரிய மூலிகை மருந்துகளை கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி மற்றும் யோகக்கலைகளில் ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள் – சித்தர்கள் sithargal.
சித்தர்கள் பிறந்த நட்சத்திரங்கள்
- அகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்.
- போகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில்.
- கமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்.
- பதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில்.
- திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில்.
- குதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.
- கோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில்.
- தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில்.
- சுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்.
- சட்டமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.
- கொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில்.
- ராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில்.
- நந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.
- இடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.
- வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில்.
- மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில்.
- பாம்பாட்டி சித்தர் பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.
- கருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில்.
arumayana thagavul