முட்டை கோஸ் பஜ்ஜி

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.

தேவையானவை :

முட்டைகோஸ்(சிறியதாக) நறுக்கியது -1 கப்,
அரிசி மாவு -1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 1 கப்,
மிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

muttai kose bajji

செய்முறை :

முட்டை கோஸை சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொண்டு, பின்பு மெல்லிய துண்டுகளாக நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளவும். சிறிது நேரம் கோஸை தண்ணீர் உலரும் வரை நூல் துணியில் போட்டு வைக்கவும். பிறகு கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் உலர்ந்த முட்டைகோஸைசேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு நன்கு வேக விட்டு எடுத்து பரிமாரவும்.

You may also like...