கம கமக்கும் காய்கறி (கதம்ப) சாதம்

தேவையான பொருட்கள்: kathamba saadham thayaarippu murai
* அரிசி – 1 கப்,
* தேங்காய்ப் பால் – 3 கப்,
* விருப்பமான காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட்,
பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்)
* வெங்காயம் – 1
* தக்காளி – 1
* கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையானவை ;
* பச்சைமிளகாய் – 2,
* இஞ்சி – 1 துண்டு,
* பூண்டு – 2 பல்,

kathamba saadham thayaarippu murai

செய்முறை:

* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
* அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இதில் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி அதன் பின் காய்கறிக் கலவையைச் சேர்த்து  நன்றாக கிளறவும்.
* அடுத்து அதில் அரிசியையும் போட்டு  தேவையான அளவு உப்பைச் சேர்த்துத் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வைக்கவும்.
* விசில் போனதும் குக்கர் முடியை திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

* கம கமக்கும் காய்கறி (கதம்ப) சாதம்  ரெடி.

kathamba saadham thayaarippu murai

You may also like...