ஆரோக்கிய நீரோடை (பதிவு 9)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” மற்றும் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 9

arogya neerodai wellness

திரட்டுப்பால்

தேவையானவை

1) முற்றிய தேங்காய் ஒன்று பெரியது. …துருவி வைத்துக் கொள்ளவும்…
2)கெட்டியான பால் ஒரு லிட்டர் ..
3)சிறு பருப்பு 100 கிராம்
4)ஏலக்காய்த்தூள் அரை ஸ்பூன்
5) நெய் 100. -150 ml
6)வெல்லம் பொடித்தது அரை கிலோ .. (வெல்லம் வாங்கும்போது நல்ல தேன் கலரில் உள்ள மண்டை வெல்லமாகப் பார்த்து வாங்கவும் ..வெள்ளை நிறம் ருசி தராது..)

செய்முறை

சிறு பருப்பை லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் துருவிய தேங்காயுடன் போட்டு அரைக்கவும். ரொம்ப மையாக இல்லாமல், சற்று கொரகொரப்பாக அரைத்து வழித்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்திலோ, குக்கரிலோ பாலை ஊற்றி பால் நன்றாக காய்ந்து கொதிக்க ஆரம்பித்ததும்… அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொடுக்கவும் ..கைவிடாமல் தொடர்ச்சியாக கிளர வேண்டும்… இல்லையென்றால் அடி பிடித்து விடும். பருப்பு நன்கு வெந்து..சற்று இறுகி வரும்போது வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அதில் சேர்க்கவும்..(வெல்லத்தை பாகு காய்ச்ச தேவையில்லை )சற்று இறுகி வர ஆரம்பிக்கும் போது… கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொண்டே வரவும்..நெய் சேர்த்தால்தான் அடிப்பிடிக்காமல், ஒட்டாமல் வரும் ..பூரணம் பதம் வந்ததும் ..ஏலக்காய் தூளை தூவி ..நெய்யை மேலே சிறிது சேர்த்து கிளறி விடவும்…
சுவையான திரட்டுப்பால் ரெடி ..

இது திருநெல்வேலியின் (100 ஆண்டு பழமை வாய்ந்த) பாரம்பரியமான ஒரு இனிப்பு வகையாகும்.இங்கு நடக்கும் திருமணங்களில் மாப்பிள்ளை…பெண் அழைப்பிற்கு.. திரட்டுப்பால் இல்லாமல் இருக்காது…

தி.வள்ளி, திருநெல்வேலி


செங்காணப் பயறுஉருண்டை

வேண்டியவை
செங்காணப் பயறு. 200.கிராம்.
வெல்லம்-. 200கி.
சீரகம். -1சிட்டிகை

செய்முறை. :
செங்காணம் (அ). கொள்ளு ப் பயறை சிவக்க வறுத்து அதில் சீரகம் சேர்த்து நன்கு, ஆறியதும் மாவாகத் திரிக்கவும். வெல்லத்தை த் தட்டி 200மி.லி.தண்ணீர் விட்டு க் காய்ச்ச வேண்டும். வெல்லம் கொதித்து மணம் வந்த பிறகு திரித்து வைத்துள்ள மாவில் சேர்த்துக் கிண்டவும். உருண்டை களாகப் பிடித்து, ஆறியதும் உண்ணலாம். மழைக்காலத்தில், நமக்கு தடுமன், குளிர் காய்ச்சல், இருமல், இவற்றில் இருந்து காத்துக் கொள்ளலாம். வெள்ளை க் காலத்திலும் இதை செய்யலாம்.

– மு. இலட்சுமி பாரதி, திருநெல்வேலி


அரைக்கீரைசாறு

வேண்டியவை.:
அரைக்கீரை. -1கைப்பிடி.
சிறிய வெங்காயம். -4.
உப்பு-வேண்டிய அளவு. தண்ணீர். -250.மிலி.

செய்முறை
அரைக்கீரை யைதண்ணீரில் அலசி நல்ல இலைகளை எடுத்து மையாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி க் கொள்ள வும். ஒரு சிறிய பாத்திரத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அரைத்த கீரை யையும், வெங்காயத்தை யும் சேர்த்து மிதமான சூட்டில் கொதித்து 200மிலியாக
வற்றிய தும், உப்பை அதிலிட்டு,2நிமிடங்களுக்குப்பிறகு, பாத்திரத்தை இறக்கி வைக்கவும். சாறு தெளிந்ததும் மிதமான சூட்டில் குடிக்க லாம்.
இரும்பு சத்து உள்ளது. காய்சலைத் தடுக்க க் கூடியது – ஆரோக்கிய நீரோடை 9.

– மு. இலட்சுமி பாரதி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *