ஆரோக்கிய நீரோடை (பதிவு 8)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 8

arogya neerodai wellness

வாழைப்பூ நம் உடல் நலத்தைக் காக்கும். இதைக்கொண்டு செய்யும் உணவு வகைகள் இரண்டை ஆரோக்கிய நீரோடை மக்களுக்குப் பகிர்கிறேன்.

வாழைப்பூ உருண்டை

வேண்டியவை:-
வாழைப்பூ – 2 கைப்பிடி
சிறு பருப்பு – 100கிராம்
சிறிய வெங்காயம் 6
மஞ்சள் பொடி – 2சிட்டிகை
சீரகம் – 1 சிட்டிகை
மிளகாய் வற்றல் 2
பெருங்காயப்பொடி – 1சி
எண்ணெய் – 100மி.லி
உப்பு – சுவைக்குஏற்ப

செய்முறை
வாழைப்பூவில் உள்ள கள்ளம் என்ற நரம்பு, சிறு மடல் இவற்றை நீக்கி தண்ணீர் விட்டு அலசி, மஞ்சள் பொடியைத்தூவிப் பிசறி வைக்கவும். பருப்புடன் அரிசியைக் களைந்து 30 நிமிடங்கள் ஊறவைத்து, வடைமாவு பதத்துக்கு ஆட்டிக்கொள்ளவும். சிறிய வெங்காயத்தை நறுக்கி மாவில் சேர்க்கவும்.மீதமுள்ள,அனைத்தையும்சேர்த்துப் சிறு சிறு உருண்டை களாக உருட்டி க் கொள்ளவும். சிறிய பொரிக்கும் சட்டியில் 3தே.கரண்டிஎண்ணையைவிட்டு, 3உருண்டைகளை அதிலிட்டு சிவக்கவெந்தும் எடுத்து ஆறவிடவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் பொரித்து, மிளகுரசத்திலிட்டு, சோசறுடன் சாப்பிடலாம். வயிறு வலியைத்தீர்க்கும். வாய்ப்புண் ஆறும் – ஆரோக்கிய நீரோடை 8.


வாழைப்பூ அடை

வேண்டியவை:-
சிறு பருப்பு. 200கிராம்
புழுங்கலரிசி 250கி.வாழைப்பூ.-2கைப்பிடி.
மஞ்சள் பொடி-2சிட்டிகை.
சீரகம்_3சி.கை,பெருங்காயப்பொடி-2சி.கை.
சிறிய வெங்காயம்_10.
மிளகாய் வற்றல்-2.
உப்பு-வேண்டிய அளவு.
எண்ணெய்- 100மி.லி.

செய்முறை:-
அரிசி, பருப்பைக் களைந்து ஊறவைக்கவும். வாழைப்பூவை, முதலில் குறிப்பிட்டதைபோல சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், மற்றும் மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். ஊறிய அரிசி பருப்பை
வடைமாவு பத்துக்கு ஆட்டி அத்துடன் வாழைப்பூ வையும், ஆட்டிசேர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற பொருள் களையும் சேர்த்துப் பிசைந்து, அடைகளாகத்தட்டி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, அடைகளை சிவக்க வெந்ததும் எடுத்து, தேங்காய் சட்டினியுடன் சாப்பிடலாம். இரத்தம் விருத்தியாகும். வயிற்று வலி தீரும். வாய் புண் ஆறும். செய்து சாப்பிட்டு ப்பயன்பெரறுங்கள்.


மாம்பருப்பு துவையல்

வேண்டியவை
வற்றல் மாம்பருப்பு-1சிறுதுண்டு.
மிளகாய் வற்றல். -1.
கறிவேப்பிலை. 1கைப்பிடி.
மல்லி இலை. -1கைப்பிடி.
உளுத்தம்பருப்பு. -1தே.கரண்டி.
நல்லெண்ணெய்.-
1.தே.க.
உப்பு. -வேண்டிய ்அளவு.

செய்முறை
கோடையில் மா வற்றல் செய்து, சேகரித்து வைப்பார்கள். அம்மாங்கொட்டையினுட் பருப்பை 1’அங்குலத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பு, எண்ணெயிவை தவிர்த்து ப் மற்ற யவற்றை நீரில், அலசி எடுத்து, எண்ணெயில், மணம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும். உப்பை சேர்த்துத்துவையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதை சுடு சோற்றிலிட்டு பிசைந்து உண்ணலாம். சாப்பாட்டுக்குத் துவவையலாகவும் உட்கொள்ள லாம். வயிறு வலி யைத் தடுக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.

– மு. இலட்சுமி பாரதி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *