ருமாலி ரொட்டி

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்

கோதுமைமாவு – 1 கப்

பால், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

bread rumali

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணி நேரம் வைக்கவும்.

பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

நான்ஸ்டிக் தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

தேய்த்த ரொட்டியை போட்டு வேக வைக்கவும்.

ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.சுவையான ருமாலி ரொட்டி தயார்

You may also like...