பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2

பெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும் . ஆகவே பிர­ச­வத்­திற்குப் பின்னர் அதி­க­ரிக்கும் உடல் எடையைக் குறைப்­பதற்கு சில இயற்கையான வழிகள் உள்ளது . அதை பின்பற்றினால் நிச்­சயம் உடல் எடையை கட்டுப்­பாட்டுடன் வைத்துக் கொள்­ளலாம் – prasavathukku pin udal edai kuraiya.

ஆரோக்­கி­ய­மான “டயட்”

பிர­ச­வத்­திற்கு பின் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது கடு­மை­யான உண­வுக்­கட்­டுப்­பாட்டை மேற்­கொள்­ளக்­கூ­டாது. ஏனெனில் அது, குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தும். உடல் எடையை அதி­க­ரிக்­காத மற்றும் உட­லுக்கு மிகுந்த ஆரோக்­கி­யத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்­க­றி­களை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் உடல் எடை­யா­னது கட்­டுப்­பாட்­டுடன் இருக்கும்.

தாய்ப்பால் கொடுப்­பது

தாய்ப்பால் கொடுத்தால் உடல் எடை அதி­க­ரிக்­காமல் இருக்கும் என்று ஆய்­வொன்று சொல்­கி­றது. ஏனெனில் பாலா­னது உற்­பத்­தி­யாகும் போது, உடலில் உள்ள அதி­கப்­ப­டி­யான கலோ­ரிகள் எரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனால் உடல் எடை­யா­னது குறையும்.

prasavathukku pin udal edai kuraiya

உடற்­ப­யிற்சி

உடல் எடையைக் குறைக்க வேண்­டு­மென்று எந்­நே­ரமும் உடற்­ப­யிற்­சியில் ஈடு­ப­டலாம். ஆனால் அவ்­வாறு உடற்­ப­யிற்­சியை மேற்­கொள்ள ஆரம்­பிக்கும் முன், மருத்­து­வ­ரிடம் ஆலோ­ச­னைப்­பெறவேண்டும். ஏனெனில் பிர­ச­வத்­தினால் உடலில் ஏற்­பட்ட காயங்கள் குண­மா­வ­தற்கு சில நாட்கள் ஆகும். எனவே காயங்கள் குண­மா­வ­தற்கு முன்பே உடற்­ப­யிற்­சியல் ஈடு­பட்டால், அது வேறு சில விளை­வு­களை உடலில் ஏற்­ப­டுத்­தி­விடும்.

போதிய அளவு உறக்கம்

பிர­ச­வத்­திற்குப் பின்னர் உடல் எடையைக் குறைப்­பதில் போது­மான உறக்­கமும் முக்­கிய பங்­கினை வகிக்­கி­றது.எப்­ப­டி­யெனில் சரி­யான அளவில் உறக்­கத்தை மேற்­கொள்­வதால், உடலானது “ரிலாக்ஸ்” அடைந்து, ஹார்மோன்கள் சீராக இருக்கும். அதிலும் இந்த செயலை குழந்தை உறங்கும் போது சரி­யாக பயன்படுத்தி கொள்வது நல்­லது.

தண்ணீர் குடிப்­பது

தாய்ப்பால் கொடுக்கும் போது, பெண்கள் அதி­கப்­ப­டி­யான தண்­ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதோடு, பாலின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். மேலும் தண்ணீர் அதிகம் குடிப்பதால் வயிறு நிறைவடையும். இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி உடலை ஆரோக்கியமனதாக மாற்றிக்கொள்ளலாம்.

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 1

You may also like...