கொங்கண சித்தர்

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரும், திருப்பதி மலை புகழ் பெற முக்கிய காரணமானவருமான கொங்கணர் (சித்தர்) கேரளத்தின் கொங்கண தேசத்தில் புளிஞர் குடியில் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன – konganar siddhar.

அரச வம்சம்

கொங்கனர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒரே மகனாவார். தனது 16வது வயதிலேயே காடுகளை வலம் வரவேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் முறையிட அவரும் ஏற்பாடு செய்தார். அந்தப் பயணத்திற்கு பெயர் பூவலம் என்று குறிப்பிடுவர்.

konganar siddhar

மழை மற்றும் சார்ந்த காடுகளைச் சுற்றி வந்த இளவரசர், தனது கண்களில் படும் பறவை விலங்கு செடி கொடிகள் அனைத்தையும் தனது வாளினால் வெட்டி வீசி எறிந்து கொண்டே வந்து சேர்ந்த மழைதான் ஊதியூர் மலை.

துறவு எடுக்க காரணம்

இளைப்பாறிவிட்டு ஒரு இடத்தில் தனது ரத்தக்கரை படிந்த வாழை ஒரு சுனை நீரில் கழுவினார். உடனே அவர் வால் வெட்டப்பட்ட அனைத்துமே உயிர் பெற்றன. அக்கணமே, அந்த அதிசயம் இவரை அரச வாழ்வை துறந்து துறவு வாழ்வில் அடியெடுத்து வைக்க காரணமாயிருந்தது. அங்குள்ள குகை ஒன்றில் தவம்செய்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார், அங்கே உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவிலை உருவாக்கினார்.

ஊதியூர் அதிசயம்

இவரை சார்ந்து பல சீடர்கள் வாழ்ந்ததாகவும், ஓரிருவர் அங்கேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. வேலாயுதசாமி கோவிலை அடுத்து இவரது சீடர் ஒருவர் தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி இன்றளவும் பிரபலமாகி வருகிறது. கொங்கணர் வாழ்ந்த ஊதியூர் மலை 3000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. அவரால் எண்ணிலடங்கா மூலிகைகள் வளர்க்கப்பட்டன.

ஊதியூர் பெயர் வந்த காரணம் (பொன்னூதிமாமலை)

கொங்கு மன்னர்களுக்கு ஆயுதம் தயாரிக்கும் இடமாக இம்மலை இருந்ததாகவும், இரும்பை உருக்க ஊதி ஊதி ஆயுதங்களை தயாரித்ததால் இப்பெயர் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பதி புகழ்

கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். தனது குருவின் ஆணைக்கிணங்க திருமாளிகைத் தேவரிடம் சமய மற்றும் நிர்வாண தீட்சை பெற்று பின்பு திருவேங்கட மலை சென்றார் என்பது போகரின் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. அங்கு பல மகிமைகள் செய்தார் என்றும் 800 ஆண்டுகள் வாழ்ந்த அவர் திருப்பதியில் ஜீவா சமாதி அடைந்தார்.

திருமணத்தடை நீக்கும் கொங்கணர்

கொங்கணர் கேது கிரகத்தை பிரதிபலிப்பதால் ராகு கேது தோஷங்கள் நீங்கி திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். மேலும் உலோகத்தை பொன்னாக மாற்றும் சக்தி பெற்றிருந்தார் என்றும் ஏழைகளுக்கு அள்ளி வழங்கினார் என்றும் செய்தி உண்டு. திருமணத்தடை, களத்திர தோஷம் நீங்கி திருமணம் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல், புகை பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும், ஞாபக சக்தி அதிகமாகும்.

கொங்கணர் இயற்றியத்தில் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
தனிக்குணம் 200
வாத சூத்திரம் 200
வாத காவியம் 3000
வைத்தியம் 200
சரக்கு வைப்பு 200
முக்காண்டங்கள் 1500
தண்டகம் 120
ஞான வெண்பா 49
ஞான முக்காண்ட சூத்திரம் 80
கற்ப சூத்திரம் 100
உற்பக்தி ஞானம் 21
முதற்காண்ட சூத்திரம் 50
வாலைக்கும்மி 100
ஆதியந்த சூத்திரம் 45
நடுக்காண்ட சூத்திரம் 50
முப்பு சூத்திரம் 40
ஞான சைதண்யம்109
கடைக்காண்ட சூத்திரம் 50
உசாத்துணை: சித்தர்கள் வாழ்க்கை வரலாறு

konganar siddhar

You may also like...