மகாகவி நினைவு தின கவிதை

என்றன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று – mahakavi subramaniya bharathiyar

சகாக்களிடம் ஈர மனம் காட்டாத
மானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்
நிழல் தந்தாய்.

காக்கை குருவி பசி விருந்தாய்
தன் பசி மறந்தாய்.
தன் இனம் தமிழ் இனம் என்றாய்!

உன்னிடம் வீண்
சம்பிரதாயங்கள் சவுக்கடி வாங்கியது !
மீசை வீரத்தின் அடையாளம் பேசியது.

பெண் இனம் பெருமை கொண்டது,
புதுமைப்பெண் அவதரித்தாள்.

வரிகளில் வீரத்தை விதைத்தாய்,
நின் பாட்டில் பாரதம் திரண்டது.

நின்றன் கவிதை தொகுப்பு
இக்கால பாடல்களின் கருவாகியது.

தமிழ் உள்ளவரை
வீரம் உள்ளவரை
மனித மனதில் ஈரம் உள்ளவரை
நின் புகழ் நிலைக்கும் – நீடிக்கும்.

நீரோடை மகேஷ்

You may also like...

5 Responses

 1. Kavi devika says:

  வாழ்த்துகள் கவிஞரே… அருமை கவி அழகு நடை..

 2. Rajakumari says:

  பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் பாடுபட்டார் இவர் இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம்

 3. பொய்யாமொழி says:

  ஆண்களின் கோப முகத்தை ரசிக்க முடியும் என்றால் இந்த முண்டாசு கவிஞனின் முகம்தான்.

 4. தி.வள்ளி says:

  பாரதியின் கவிதைகள் தேன்கூடு. குழந்தைகளை ஓடி விளையாட சொன்னவன்…. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் புதுமைப் பெண்ணை படைத்தவன்…பாஞ்சாலி சபதம் வடித்தவன் …காக்கை குருவியை தன் ஜாதி என்றவன்… பாரதியின் கண்ணம்மாவை மறக்க முடியுமா? அக்கவின் நினைவுநாளை போற்றுவோம் நீரோடையின் இளங்கவியுடன் இணைந்து…

 5. பாரிஸா அன்சாரி says:

  மகாகவி பாரதியார் நினைவு தின கவிதை-
  பின்னூட்டம்
  எண்ண, ஓட்டத்துடன், மிக
  “நீட்டமாகப்” படைத்ததால்,

  தயங்கி அதை என்னிடமே,
  தக்க வைத்துக் கொண்டேன்!