சந்தன நிலவு – காதல் கவிதை

சந்தன நிலவொன்று
மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai.

உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு
ரோசா மலர் நாணுகிறது,
அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும்
இந்த தமிழ்ச்சியின் வெட்கம்.

முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும்
உன் வெட்கம் அருவிச்சாரலாய்.

உன்னை மறப்பது மூடத்தனம்,
உன் புன்னகை தான் எனக்கு மூலதனம்,

முற்றுப்புள்ளி வைக்கப்படாத என் முதல் வாக்கியமே,
முடிவும் நீ தான், முடிவில்லா
என் நீரோடை பயணமும் நீ தான்.

உன் மரகதப் பார்வையில் மயங்கி
கிடக்குது என் கற்பனைகள்.

– நீரோடை மகேஷ்

You may also like...