நீரோடை இலக்கியச் சந்திப்பு 2

நீரோடை இலக்கியச் சந்திப்பு முதல் நிகழ்வு அவிநாசியில் சிறப்பாக நடைபெற்றது. நேரடியாகவும், இணையவழியாகவும் (YouTube Live) கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ilakkiya santhippu 2.

 

கலந்துகொள்ள இங்கே சொடுக்கவும் meet.google.com/qiu-cuty-hwh 

Or dial: (US) +1 929-299-3793 PIN: 794 996 643# 

More numbers: t.meet/qiu-cuty-hwh

இலக்கிய சந்திப்பு

Google Meet வாயிலாக வரும் ஞாயிறு 17 மார்ச் 2024 அன்று மாலை 5:30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்வின் துவக்கமாக நாட்டுப்புறப்பாடல் இடம்பெறும், அதனைத் தொடர்ந்து கவியரங்கத்தில் இளம் கவிஞர்கள் முதல் பல நூல்கள் வெளியிட்ட பெரிய கவிஞர்கள் வரை அனைவரும் கவிதை வாசிக்க உள்ளனர்.

கதை நீரோடை என்ற பெயரில் கதை கேளு நிகழ்ச்சி சென்ற மாதம் துவங்கப்பட்டது. அதன் முதல் நிகழ்வை இலக்கிய விழாவாகவே நீரோடை நடத்துகிறது. இக்கால மற்றும் வருங்கால “கதை சொல்லிகள்” ஒரு நிமிடக்கத்தை வாசிக்க உள்ளனர்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், கதை சொல்லி “நெய்வேலி பாரதிக்குமார்” அவர்கள் “கதைசொல்லிகள் காலத்தின் தூதுவர்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கவுள்ளார். கதை சொல்லிகளால் மட்டுமே வாசிப்பை மீட்டெடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தலைப்பு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கூகுள் சந்திப்பில் (Google Meet) நடைபெறும் இந்த இணையவழி நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென நீரோடை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

https://meet.google.com/qiu-cuty-hwh

இணையத்தில் இணைவோம்..

You may also like...