காதலர்தின சிறப்பு கவிதை 2011

பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து
உனைத்தேடிய என் பார்வைகள்
உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய
தருணம் …
தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன்
நிலவே உனைத்தேடுகிறது.

தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை
கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி
கிடைத்தால் போதும் உன்னை
சிறை பிடிப்பது சத்தியம்.

நீ சம்மதித்தால் கட்டில் அறை தவிர்த்து
தொட்டில் அறை அமைப்பேன், உன்னை
காலமெல்லாம் தாலாட்டத் துடிக்கும்
என் காதலுக்காக.!

kaadhalar thina sirappu kavithai 2011

அகத்தில் மகவாய் நீ இருந்தாலும்
என் மார்பில் உன்னை தாலாட்ட
உன் உருவம் சம்மதிக்காது …
அதனால் மடியில் தாலாட்டும் தருணம்
எதிர்நோக்கி என் இதயம்.

என் தாய் காட்டிய பாசம் உன்னைக் கண்டதும்
என்னையும் தாயாய் உருவகித்தது ……….

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Anonymous says:

    Nicely written

    priya