நான் இறந்துவிட்டால்

குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal

நமது ஊர் கல்லறைத் தோட்டம்
முட்கள் நிறைந்தது …
நீ எனக்கு அஞ்சலி செலுத்த
வரும்போது !!
உன் பூ பாதம் முட்களால்
தீண்டப்படும் என்பதால்,
என்னை, மின் மயானத்தில் அஷ்தியாக்கி
உன் பாதம் படும் உன் வீட்டு முற்றத்தில்
தூவச் சொல்கிறேன் ……..

naan iranthuvittaal

என் அஷ்திகூட
உன் பாதம் தழுவும், உன் வீட்டு சுற்றத்தின்
புற்களுக்கு உரமாகி சிறு துரும்பும்
உன்னை காயப்படுத்த அனுமதிக்க மாட்டேன்,
நான் வீழ்ந்த பின்னும்.

காதலில் மரணிக்காத இவன் என்றும் நினைவுகளுடன்.

naan iranthuvittaal

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. உங்கள் எழுத்து மனதை ஏதோ செய்கிறது…
    நன்றி அருமையான கவிதை தந்ததற்கு…

    http://sakthistudycentre.blogspot.com தளம் தங்களை அழைக்கிறது.. Follow ஆகிட்டேன். ஓட்டும் போட்டட்டேன்.