காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்)

துடிக்க மறந்த இதயத்துடிப்புகள்
பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் .

காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை
நனைக்கும் கண்ணீரால் என்ன பயன்.

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

எல்லா உணவையும் ருசிக்க ஆசைப்படலாம்,
ஆனால் நீ உன் நாவை ருசிபார்க்க முடியுமா,
திரும்பாத தூரத்தில் நம் காதல்.

காதலுக்கு கல்லறை முகவரி தந்துவிட்டு
போலி பிணங்களுடன் நிஜ வாழ்க்கை
நடத்தும் உன் உள்ளம்.

நீயா இல்லை
நானா ?
யார் முதலில் காதல் குற்றவாளியானது,????

காலம் கடந்து திரும்பிய உன் காதலால்
என் கருவறை காத்திருக்காததால்,
கல்லறைக்கு சென்றுவிட்டோம்…
(நானும் உன் தலைமுறையும்). .

– நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

 1. thamsg says:

  konjam overa feel pannitiyo………..

 2. Prakash says:

  காலம் கடந்து திரும்பிய உன் காதலால்
  என் கருவறை காத்திருக்காததால்,
  கல்லறைக்கு சென்றுவிட்டோம்…
  (நானும் உன் தலைமுறையும்). . .

  Super Line Mahesh.

 3. Prakash says:

  காலம் கடந்து திரும்பிய உன் காதலால்
  என் கருவறை காத்திருக்காததால்,
  கல்லறைக்கு சென்றுவிட்டோம்…
  (நானும் உன் தலைமுறையும்). . .

  Super Line Mahesh…