ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில்
என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட
பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love

நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில்
நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் ..
உன் கண்களில் பெருக்கெடுத்து
நம் காதலுக்கும், காலத்துக்கும்
பதில் சொல்ல வரும் உன் கண்ணீருக்கு
பதில் சொல்ல இலக்கியத்தில் தேடியும்
என்னிடம் வார்த்தைகள் சிக்கவில்லையடி.

love poem tamil kavithai rainy love

உனக்கென்ன,,
என் மார்பில் தலை சாய்த்த அக்கணமே,
உன் காதலை இறக்கி வைத்துவிட்டாய் .
சுகம் தாங்க முடியாமல், சுதாரிப்புகள்
தொடராத தவிப்புகளில் நான் இங்கே.

உன் ஒரே பார்வையில் இந்த
ஆடை நெஞ்சின் விரிசல்களில் தினம் தினம்
நீ அடைமழை தருவதால் மட்டுமே,
இத்துனை தவிப்புகளிலும் நான் வாழ்கிறேன்.

You may also like...

3 Responses

  1. சுதாரிப்புகள்-சுதாகரிப்புகள்

  2. Chitra says:

    அருமை.