கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்

உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட
மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள்.
அதில் சிறைக் கைதியாய் கவிதைகள்
பாடித்திரியுதடி என் எண்ணங்கள்.
 kadavulin uzhaippai minjiyavan
சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என்
மைதீர்ந்த பேனாக்கள்.
உன்தன் விதியை எழுதிய கடவுளின்
உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம்
கொண்டவன் நான் மட்டுமே.

 

 – நீரோடை மகேஷ்.

You may also like...