நடுத்தர சாமானியன்

நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai.

naduthara varkkam kavithai

வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகர
வழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…
ஆனால்
அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தை
ஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்…

பேருந்தில் ஒன்றை கையில் கம்பியை பிடித்து
ஒய்யாரமாய் தொங்கி வர ஆசை தான்…
ஆனால்
ஒழுங்காய் ஓடி நடுவில் ஒளிந்து கொள்
என ஓலமிடுகிறது இந்த மனம்…

பொதுவெளியில் பொதுநலன் கருதாமல்
கூட புகைத்து தள்ள ஆசை தான்…
ஆனால்
மனநலன் கருதி மரியாதையாக மாட்டேன்
என சொல்லிவிடுகிறது இந்த மனம்… – naduthara varkkam kavithai

மூச்சு முட்ட குடித்து விட்டு போதையில்
மூழ்கியபடியே கும்மாளமிடவும் ஆசை தான்…
ஆனால்
மூன்றாவது உணவு வேலைய உதறிவிடலாம
என உணர்ச்சி வசப்படுகிறது இந்த மனம்…

மனிதனின் மாற்றத்தில் மாபெரும் பங்கு
இந்த மனதிற்க்கு மட்டுமே போலும்…!!
புலம்பல்களோடு …

– மணிகண்டன் சுப்பிரமணியம்.

You may also like...

5 Responses

 1. சக்தி வேலாயுதம் says:

  ஒழுக்கம் அனைவருக்குமானது…

  ஒழுக்கமே ஒருவரை சுயம் உயர உணரவைக்கும்..

  இன்றைய தலைமுறை தன்னகத்தே பதிய வைக்க வேண்டியது..

  வாழ்த்துக்கள் மணிகண்டனின் வரிகளுக்கு…

 2. Sriram says:

  மனம் ஒன்று இல்லை என்றால் என்ன ஆகும் என்பது அழகாக சொல்லிவிட்டார் கவிஞர்

 3. Rajakumari says:

  கவிதை நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி

 4. தி.வள்ளி says:

  ஆசைகளையும், உணர்ச்சிகளையும் கட்டுபடுத்த தெரிந்துவிட்டால் போதும் ,மனம் நாம் சொல்வதைக் கேட்கும்..அழபட உரைத்தது இளம்கவியின் வரிகள்..பாராட்டுகள்..

 5. Ananthi says:

  Well said,Sir…!! very true!
  Excellent way of narration! keep on going!
  Congratulations,Sir