கற்றாழையின் நன்மைகள்

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

benefits of Cactus katraazhai nanmaigal

1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக் நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு, வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய், தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள் கட்டுப்படும்.

3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில் ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால், கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம், பிரச்னையும் குணமாகும்.

4 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

5 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு, சுவாசக் கோளாறுகளை நீக்கும்.

6 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம் கிடைக்கும். சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது

7 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி, செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.

8 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம் குணமாகும். வலி குறையும்

9 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச் சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த மலமிலக்கியாகச் செயல்படும்.

10 கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

You may also like...