காதல் கவிதைகள் தொகுப்பு 1

Kaathal kavithai thoguppu

நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu

மகேஷ்கண்ணா

தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக .
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்.

neerodaimahes kavithai

Maheshkanna
Thinam Thinam Nooru Kavithaikal
Unnaal Unakkaga.
Unnidam Athai Kaatta ?
Un Manam Kayappadakkodadhu
Endra Payam,
Ennidam Vaiththuk kolavum Manathil Ranam,
Athanaal Intha Varaivalaiyil Vittu
Chelkiren.

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல தித்திக்கும் !!
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால் …….
thithikkum kavithai
Thiththikkum
Unnai Ninaiththu Azhumpodhu
Varum Kaneer Kooda
Karumbaip Pola Thiththikkum !!!
Yen Yendraal Ninaivil
Nee Iruppathaal……

கவிதையைத் தேடி ஒரு பயணம்

என் தேவதையால் தொலைந்து போன
வார்த்தைகளை தேடி கனவில் கால்
பதிக்கிறேன்.

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிடுகிறேன் .
கவிதையைத் தேடி ஒரு பயணத்தில்.

kavithaiyai thedi oru payanam

Kavithaiyaith Thedi Oru Payanam
En Thevathaiyaal Tholaindhu Pona
Vaarthaikalai Thedi Kanavil Kaal
Pathikkiren.
Konjam Poruththukkollungal
Idho Vandhuvidukiren.
Kavithaiyaith Thedi Oru Payanaththil

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.
நினைவுகள் தேய்ந்தாலும்,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Kaathal kavithai thoguppu
En MuzhuNilavukkaga
Mugam Theriyatha Muzhunilavukkaga !!!
Thinam Thinam
Theipiraiyagum En Ninaivukal.
Ninaivukal Theinthaalum,
Naan Ninaippadhu
Thodarndhu Konde Irrukum.

கனவில்

 ஒரு முறை வந்தால் அது
கனவில் வந்த வானவில்.
தினம் தினம் கனவை அலங்கரித்தால்
அது என் காதல் தேவதையே உன்
கால்தடம் .kanavil nee varuvathaalஇரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ
வருவதால்.
Kanavil
Oru Murai Vanthaal Adhu
Kanavil Vantha Vaanavil.
Thinam Thinam Kanavai Alamkariththaal
Adhu En Kaathal Thevathaiye Un
Kaalthadam.
Iravaiyum Nesikkiren Kanavil Nee
Varuvathaal

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் ,
ஆனால்
அவள் விழிகள் மட்டும் என் கண்களையே
கவர்ந்து விட்டதே .aval kangal kavithaiபார்வை படும் தூரமெல்லாம்
அவள் பிம்பமாய் !

 Aval Kankal

Vizhikal Thaan Paarvaitharum
Aanaal
Aval Vizhikal Mattum En Kankalaiye
Kavarnthu Vittathey
Paarvai Padum Thooramellaam
Aval Bimbamaai.

இடக்கண்ணில் தூசிவிழுந்தால்
வலக்கண்ணும் அழுவதேன்?
நீ
தூசி தாங்கும் இடக்கண்ணா
எனக்கென அழும் வலக்கண்ணா

இல்லை வேடிக்கை பார்க்கும்
அந்த மூன்றாவது நபரின் கண்களா?

Idakkannil  thoosi vizhunthaal
valakkannum azhuvathen?
nee thoosi thaangum idakkanna
enakkena azhum valakkanna?

illai vedikkai paarkkum antha moondraavathu
nabarin kangalaa?

 – நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. mala says:

    நைஸ் போஸ்ட்