உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில்
என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன்
நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும்
விபத்துகளால் என் பனிமலைக்குள்
பூகம்பம்.
தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும்
என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!!travell with lover uyiril uraithadi

என்னருகே நீ அமர்ந்த
அந்த பேருந்து பயணத்தில், கண் அயர்ந்து
நீ தலை சாய்க்கும் நிமிடங்களை நோக்கி
என் தோள்கள் தவம் கிடக்குதடி..

உயிரே, ஏன் இந்த சொர்கத்தின் சாரல்,
மலரே, ஏன் இந்த மரகத வாசம்,
உன்னுடன் இந்த பயணம் தரும்
சுகம்,
உயிரில் உரையுதடி…..

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்……
Please post your comments……

You may also like...