சூழ்நிலை சுதாரிப்புகள்

உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு
பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு
பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல
நடு வானின் வெப்பத்தை
சுதாரிக்க முயற்சிப்பதைவிட
இடம் அறிந்து போராடு .

soolnilai sudharippugal

போராடித் தோற்றாலும் உன்
வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல
முயற்சிக்கும்.

காகிதப்போர் புரிந்து கடலையும்
வற்ற வைக்கலாம்.
வெற்றி அருவி உன் காலடியில்
போராடு !

 – நீரோடை மகேஷ்

You may also like...