வெற்றிக்கோப்பை

வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு.
உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு செய்து சொல்லிடுங்க …………….

காதலை ஏற்காத பெண்மை தன்னை
நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக
மதுக் குடுவை திரவிய மயக்கத்தில்
மதுக் குளியல் போடும் மீன்களே சற்று
இதையும் நுகருங்கள் !!

vetri koppai mathuk koppai

பகல் இரவு தாண்டிய கிரகங்களை எட்டிப்
பார்த்துக் கொண்டிருந்த அறிஞன் இன்று
அங்கிருந்து பூமியை பார்க்கிறான்
ஓய்வெடுக்கும் வேடந்தாங்கல் பறவையை போல!

இன்னும் இங்கு பலர், போதையில் மட்டுமே
புதிய கிரகம் பிரவேசிகளாய்……….

வேடிக்கை பார்ப்பவனுக்கு புதையல்
என்றும் சொந்தமாகாது … களத்தில் கடின மண் பரப்பையும்
வியர்வை கொண்டு இலகுவாக்கி பணிய வைப்பவனே
வெற்றி கொள்வான்….

– நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

 1. Chitra says:

  பகல் இரவு தாண்டிய கிரகங்களை எட்டிப்
  பார்த்துக் கொண்டிருந்த அறிஞன் இன்று
  அங்கிருந்து பூமியை பார்க்கிறான்
  ஓய்வெடுக்கும் வேடந்தாங்கல் பறவையை போல!

  ….. well written.

 2. நல்லாயிருக்கு சகோ..வாழ்த்துக்கள்.

 3. Maheswaran.M says:

  நன்றி சகோதரிகளே !!!!