பிரிவுத் துயர் – காதல் கொலைகாரி

ஜென்மங்களை வென்ற காதல் என்று kaathal kolai kaari pirivu thuyar
நினைத்தாலும்,
தன் தாயின் ஒரு துளி கண்ணீர் அதை
விலை பேசிவிடும்.

தன்னை சுமந்த கருவறையை குளிர்விக்க,
தன் காதலையும் கல்லறைக்கு அனுப்பும்
உலகமடா இது!

உறவுகளை மட்டுமல்ல !
காதலையும் காலமெல்லாம் சுமப்பது
இந்த ஆண் வர்க்கம் தானடி!

உன்னை நினைக்கக் கூடாதென
துடித்த நாட்களில் தான் ,,,
உன் நினைவால் அதிகம் துடிக்கிறேன்.

kaathal kolai kaari pirivu thuyar

நினைவுகளாய் மட்டுமே நீ மாறிப் போனபோது
என்றோ நீ சாய்ந்த என் தோள்களும்
கனக்குதடி இன்று.

உன்னால் உனக்காக,
காதலோடு தூக்கத்திலும் (அன்று)
கண்ணீரோடு துக்கத்திலும் (இன்று)
என் கற்பணையில் சுரக்கும் கவிதை நீரோடை மட்டுமே
நீங்காத நிரந்தரமாய்.

– நீரோடை மகேஷ்

kaathal kolai kaari pirivu thuyar

You may also like...

4 Responses

  1. உண்மை வரிகளில் ஆரம்பித்து… முடிவில் நெகிழ வைக்கும் வரிகள்…

    tm1

  2. உன்னால் உனக்காக,
    காதலோடு தூக்கத்திலும் (அன்று)
    கண்ணீரோடு துக்கத்திலும் (இன்று)
    என் கற்பணையில் சுரக்கும் கவிதை நீரோடை மட்டுமே
    நீங்காத நிரந்தரமாய்.

    இந்த வரிகள் அருமையாக இருக்கிறது.
    தொடர்ந்து நல்ல நல்ல வரிகளை கொடுங்கள்.

  3. Maheswaran.M says:

    மிக்க நன்றி
    தங்களின் பாராட்டுகள் தான் என்னை மேலும் எழுத தூண்டுகிறது.

  4. nalla varanum sir neenga…….!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *