கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40

kavithai thoguppu 27
பயணங்கள்

வாழ்க்கை பயணங்கள்
புரியாத புதிர்கள்
புறப்பட்ட இடம்
தாயின் கருவறை
சென்று சேருமிடம்
நீர்நிலையின் ஒருகரை
இன்ப துன்பம்
வந்துவந்து போகும்
இடையிடையே இதமும்
அழகு தரும்
வருவதும் போவதும்
மனிதர்கள் சிநேகிதம்
நினைவில நிற்பவர்
சிலர் என்றால்
காணாமல் போவது
பலர் ஆவர்
பயணத்தில் படிப்பது
சுகம் தரும்
வாழ்க்கை பாடம்
சொல்லும் பல வேதம்
கடந்து செல்வது
மைல்கல்கள் மட்டுமல்ல….
மனக்கவலைகளும் தான்
புறப்பட்ட பயணத்தை
பாதியில் நிறுத்தி
பயனில்லை….
தன்னம்பிக்கையோடு தொடர்வோம்
நல்லதோர் விடியலைத்தேடி..

– கவி தேவிகா தென்காசி


எந்நாளும் இந்நாளே!

ஒற்றை நிலவின் மீது
இரட்டை சூரியன்களின்
வெளிச்சம் பட்ட தருணம்
அவளின்
மாலை நேர முகப்பொலிவு.

என் கண்கள் தானோ
அவ்விரட்டை சூரியன்கள்
என்ற நாணத்தில்
புன்னகை சிந்தும் – kavithai thoguppu 40
அவளின் உதடுகள்.

அவள் அழகென்னும்
பிரபஞ்சத்திலிருந்து
வெடித்து சிதறிய
விண்கற்களின் தீப்பொறி
தான் இக்கவிதை வரிகள்.

அன்புக்கினியவளுக்கு
செல்லத்துணைவிக்கு
காதலர்தின வாழ்த்துக்கள்..

– நீரோடை மகேஸ்


தேடுகிறேன்….!

கிளுவங்கதியால்களும்
கிடுகு வேலிகளும் எங்கே போயின
பூவரசமரங்களும் அவற்றில் வீற்றிருந்த
புளுனிகுஞ்சுகள் எங்கே போயின
ஆவரசம் பற்றைகள் எப்படி அழிந்தன
வேலியோரம் விளையாடிய அணில்களும்
ஓணான்களும் இடம்பெயர்ந்தனவோ
காவியங்கள் எழுதி வைத்த கள்ளி
மரங்கள் காற்றில் வீழ்ந்தனவோ
இழைத்த பாயை களைத்தபடி சுமந்து விற்கும்
கிழவி இன்னும் தெருக்களில் தென்படுகிறாளா
கீரை கீரை கூவி விற்கும் சிறுவன் எங்கே
நாவினிக்க நாம் தேடியுண்ணும்
நாவற்பழ மரங்கள் விறகாயினவோ
வேலிபிரித்து களவாய் பறித்த
விளாம்பழங்கள் சுவை இன்னும் கிட்டுமோ
கல்லெறி வாங்கியே காயம்பட்ட
கறுத்தகொழும்பான் இருக்குமா
தொட்டவுடன் சட்டென சுருங்கும்
தொட்டால்சிணுங்கி தொட முடியுமா
ஆற்றோரம் நிழல்தந்த தாழைமரங்களும்
ஓடி ஒழித்து விளையாடிய வாழை தோட்டங்களும்
செக்க செவேலென சிவந்த முற்றம்
வரவேற்கும் செவ்வரத்தம் பூக்கள் பூக்கின்றனவா
தேடுகிறேன் இன்னும் தேடுகிறேன் – kavithai thoguppu 40

– நவீன், ஈரோடு


உன்னால் தானடி(டீ)

உழைக்கும் மக்களின் உயிர் நாடி
உன்னாலே இயங்குத “டீ”

உள்ளூர் உலக அரசியலும்
உன்னுடனே சேர்ந்து
தேநீர் கடை வழி பார் பரவுத “டீ”

ஊக்க மருந்தாய்
ஒரு வேலை உணவாய் உணர்ச்சியாய்
உயிருடன் கலந்தாய் ய “டீ”

பல பெயரிட்டாலும் பருக பருக
நாவில் உமில் நீர் சுரக்குத”டீ”

பாதி உலகில் பாமரனுக்கும்
பணத்தால் ஆணவனுக்கும்
என்றும் பருகும் நீர் நீ ய”டீ”

உன்னாலே….
என் – நாளும் தினமும் ஓடுத “டீ”….

– சிவராஜ் மணிவண்ணன்

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    அறிமுக கவிஞருக்கு பாராட்டுகள்…