காதல் சிலந்தி

குருதி மட்டுமே துளைத்து செல்லும்
என் நரம்புகளில் வெற்றிடம்,
இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ?

kathal silandhi kavithai

என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை !
கனவுகள் தொடாத கரையை
கற்பனையில் வற்ற வைத்து
தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை
பின்னும் சிலந்தி நான்.என் இதயத்துடிப்பும் உன் பெயரை மொழிந்துகொண்டே
என்னை உறங்க விடாத இன்ப ஊர்வலத்தில்.உறங்காத விழிகளையும் நீ தான் கொடுத்தாய்,
உறங்கி சில நேரக் கனவுகளையும் நீ தான் கொடுத்தாய்.

– நீரோடை-மகேஷ்

kathal silandhi kavithai

You may also like...

2 Responses

 1. Ramani says:

  உயிரில் நூலெடுத்து காதல் வலை
  பின்னும் சிலந்தி நான்.//

  மனம் கவர்ந்த அருமையான கவிதை
  குறிப்பாக மேற்குறித்த வரிகள்
  தொடர வாழ்த்துக்கள்

 2. அருமை… ரசித்தேன்…

  வாழ்த்துக்கள்…
  tm1