காதலின் வலிகளும் பூப்பறிக்கும்

காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே
கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த
கடலையும் பரிசளிப்பேன்.

kathalin valigalum pooparikkum

உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த
தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன்.

வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும்
அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத் துடிக்கும்.

ஜென்மங்களை வென்ற காதல் இது….
இதிலும் உன்னை கை பிடிப்பேன் என் கலைமகளே.!!!!

கவலை கொள்ளாதே !
மௌனங்களால் என்னை கொல்லாதே
என் நீரோடைப் பெண்ணே !

என் உயிர்க் கருவறையில்
உன் காதலை சுமக்கிறேன்
நானும் தாய் தானடி!
காதல் தாய் தானடி!

உயிரில் உயிரை சுமப்பதும் சுகம் தானடி
உயிரில் கலந்த உண்மைக் காதலுக்காக!!!

– நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. /// நானும் தாய் தானடி!
    காதல் தாய் தானடி! ///

    மிகவும் அருமை… வாழ்த்துக்கள்…
    tm1