பொது கவிதைகள் தொகுப்பு 2

Pothu kavithai thoguppu

கனவே கலையாதே

கனவுகளில் நீ ! pothu kavithai thoguppu
கற்பனையில் நீ !
நினைவுகளாய் தொட்ரந்தாலும்,
முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய்.
கனவே கலையாதே.

kanave kalaiyaathe

Kanave Kalaiyathey
Kanavukalil Nee !
Karpanaiyil Nee!
Ninaivukalaai Thodarthaalum,
Mudivil Nee Mattum – En Mudivaai

Kanave Kalaiyathey.


விதவைக்கோலம்

வழியெல்லாம் மல்லிகை பூ,
ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை
தலையில் வைக்க உறவு இல்லை!
– விதவைக்கோலம்.

vithavaikolam kavithai

Vithavaikkolam

Vazhiyellam Mallikai Poo
Aanaal Than Paatham Pada Urimai Illai
Thalaiyil Vaikka Uravu Illai !

– Vithavaikkolam


வாழ்க்கை

சோகமான முடிவுகள்தான்
காவியத்தில் இடம் பெரும் !
அதற்காக யாரும்
சோகத்தை முடிவாக்குவது இல்லை.
காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி
செய்யாமல் இருப்பதும் இல்லை

vazhkai kavithai

Vazhilkai
Sogamana Mudivukalthaan
Kaviyathil Idam Perum !
Atharkaaga Yarum
Sogatthai Mudivaakuvadhu Illai.
Kaaviyathil Idam Pidikka Muyarchi

Seiyaamal Irruppadhum Illai.


கல்லுரி வாழ்க்கை

நட்பெனும் வார்த்தைக்கு,
அர்த்தம் தேடி சொர்க்கத்தில்
தொலைந்த என்னை ,
பிரிவு என்ற தண்டனையுடன்
நரகத்தில் கண்டெடுத்தேன்
உனைப்பிரியும் இந்த நேரம்.

Kalluri Vazhkai Kavithai

Kalluri Vazhilkkai
Natpenum Vaarthaikku
Artham Thedi Sorkkaththil
Tholaintha Ennai,
Pirivu Endra Thandanaiyudan
Narakaththil Kandedothen

Unaippiriyum Intha Neram


பிப்ரவரி 14

பிணத்திற்கு கொடுக்கும் மாலை
மரியாதை கூட வேண்டாம் ….
எங்களை பிணமாக்கி விடாதீர்கள்
என்று தான் சொல்கிறோம்
…….உண்மை காதல்……….

febraury 14 kavithai

February 14
Pinathirkku kodukkum Maalai
Mariyathai Kooda Vendam
Engalai Pinamakki Vidatheerkal
Endru Thaan Solkirom

…..Unmai Kaathal……..


நிலவாக மாறி

வானத்தை பிடிக்காத நட்சத்திரம்
ஒன்று பூமிக்கு வந்தது
என்னை விரும்பி ,
பூமியில் எனக்காக
வாழ ,… நிலவாக மாறி !!!!!!!!!!!

pothu kavithai thoguppu

Nilavaaga Maari
Vaanaththai pidikatha Natchaththiram
Ondru Boomikku Vanthadhu
Ennai Virumpi,
Boomiyil Enakkaka
Vaazha…. Nilavaaga Maari !!!!!!!

இதயமே அவளிடம் இருக்காதே

பெண்ணின் மனதில் இடம்
கிடைப்பது தவம் என்றால்
அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம்,
உன்னைப்போருதவரை இது உண்மை ………
என்னவளே …………..
என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின்
ஒவ்வொரு அணுவும்
உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே …….
Idhayame avalidam irukaathe
Idhayame Avalidam Irukathey
Pennin Manathil Idam
Kidaippadhu Thavam Endral
Aval Vazhilvil Idam Kidaippadhu Varam,
Unnaipporuththavarai Idhu Unnmai…..
Ennavale………
En Idhayathil Uraindhu Kidakkum Irathathin
Ovvoru Anuvum
Un Ninaivodu Melum Uraindhukonde…….
En Idhayame
Avalidam Irukathey, Ennidam Vanthuvidu…

அவள் புன்னகை

உன் புன்னகையில் இருந்து சிதறியது
முத்துக்கள் என்று இருந்தேன்,
ஆனால் சிதறியது என் மௌனம்,
உன் மேல் கொண்ட ஆசையை
என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.

aval punnagai
Aval Punnakai
Un punnakaiyil Irundhu Sithariyadhu
Muththukkal Endru Irunthen,
Aabaal Sithariyadhu En Mounam,
Un Mel Konda Asaiyai
En Mounathil Siraivaithirunthen.
Un Punnakaiyaal Indru Sithari
Velippattadhu.

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Kokila says:

    கவிதை அனைத்தும் ரொம்ப நல்ல இருக்கு கவிஞர் மகேஷ் அவர்களே…