ஆரோக்கிய நீரோடை (பதிவு 7)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7

arogya neerodai wellness

தினைப்பிடிமா

செய்முறை:
வேண்டியவை:
தினையரிசி – 200கிராம்
பொரி கடலை – 100கிராம்
வெல்லம் – 150
ஏலம் – 3 எண்ணிக்கை

செய்முறை:
தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும். பொரிகடலையை சிறிது வறுத்து மாவுடன் சேர்த்துக் கலந்து விடவும். வெல்லத்தை ஒரு சிறிய சட்டியிலிட்டு 250மி.லி . தண்ணீரில் கரைத்து சுடவைக்கவும்.

வெல்லம் நன்கு கரைந்து, கொதித்து மணம் வரும் பொழுது இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். ஏலத்தைத்தட்டி, காய்ச்சிய பாகிலிட்டு சூடாக உள்ள
உள்ள போதே மாவுக் கலவையில் சிறிது, சிறிதாக ஊற்றி நன்கு கிண்டி உருண்டை களாகப்பிடித்து ஆறியதும் உண்ணலாம்.

நெடுந்தொலைவு நடந்த களைப்பை இவ்வுணவை உண்பதால் போக்கலாம். இரும்பு சத்து நிறைந்த உணவாகும். குளிர் காலத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாக்கும்.


செவ்வாழைப்பச்சடி

செவ்வாழைப்பழம் – 1
வெல்லம் – 25 கிராம்
சீரகப்பொடி- 5 கிராம்

செய்முறை
செவ்வாழைப் பழத்தைத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைத் தட்டி, சிறிய சட்டியிலிட்டு 1கரண்டிதண்ணீர்ஊற்றிப்பாகு பதத்துக்கு காய்ச்சவும். பிறகு மசித்த செவ்வாழையைப் பாகுடன் சேர்த்துக் கிண்டவும். இரண்டும் நன்கு சேர்ந்ததும், சீரகப்பொடியையும், அதில் சேர்த்துக் கிண்டவும். நன்கு சுண்டி வரும் பொழுது இறக்கி ஆற விடவும். இட்டளி, தோசை, அடை இவற்றுக்குத் தொட்டுக் கொண்டு உண்ண ஏற்றது.

இரவு உணவாக இதை உண்டால் எளிதில் உறக்கம் வரும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக கர்ப்பிணி ப் பெண்கள் இதை வெல்லம் சேர்க்காமல் பழம் மற்றும் சீரகப்பொடியுடன் சாப்பிட குருதி அணுக்கள் கூடி நன்கு உறக்கம் வரும்.


நோய்கள் நமைத்தாக்காமல் காக்கும் குடிநீர் செய்முறை யைப் பதிகின்றேன்.

வேண்டியவை
வெற்றிலை – 2
சுக்கு – 1 சிறு துண்டு
மிளகு – 4
சீரகம் – 1 சிட்டிகை.
ஓமம் – 1 சிட்டிகை.
கொய்யா இலை – 2
தண்ணீர் – 250மி.லி

செய்முறை
சிறிய சட்டியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சுட வைக்க வேண்டும்.
இலைகளைத் தவிர மற்ற வற்றை ஒன்றிரண்டாகத் தட்டி, சுடும் நீரில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து, வெற்றிலையை சிறியதாக நறுக்கி சேர்க்கவும். குடிநீர் கொதித்து வரும் பொழுது, கொய்யா இலைகளை சிறிய தாக
நறுக்கி சேர்க்கவும். குடிநீர் 200மிலி.ஆக வற்றிய தும், இறக்கி வைக்கவும். மிதமான சூட்டில் வடிகட்டி க் குடிக்கலாம். சிறுவர்களுக்கு 50மி.லி., பெரியவர்களுக்கு 100மி.லி.அளவும்குடிக்கலாம்.வெற்றிலை, கோழையகற்றியாக செயல்படும். மிளகு காய்ச்சலலைத் தடுக்கும். கொய்யா இலைகள், வயிற்றுப்புண்களை ஆற்றும். இக்குடிநீரை நீங்களும் செய்து குடித்து
பலன் பெறுங்கள் – ஆரோக்கிய நீரோடை 7.

– மு. இலட்சுமி பாரதி, திருநெல்வேலி

You may also like...

1 Response

  1. கு.ஏஞ்சலின் கமலா says:

    நல்ல வித்தியாசமான பதார்த்தங்கள்.
    நன்றிகள்