கவிதை தொகுப்பு 65

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65

pothu kavithaigal thoguppu 6

பெண் மலர்கள் பூக்கட்டும்!!

விழிக்கு விமரிசையாய்,
விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்
விரியும் பூவிதழை தடுப்பாயோ???
அது போலவே,
பூ போன்ற மென்மையும்,
மெல்லிசையுமாய் மலரும்
பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??

கள்ளிச்செடிகளையும், களைச் செடிகளையும்
களைந்தெறியலாமே??..
பெண் மலர்கள் பூக்க!!!

கள்ளிப்பாலூற்றி,
பெண்ணினத்தைக் கலைத்தாலும்,
காலத்தால் அழியக்கூடிய ஓவியமா??
பெண்மலர்!!
நீ கலைத்தாலும், கலையுடன் கூடிய மலர்
கலையாது….
விரிந்தே தீரும்!!

மலர்களின் மொட்டு போல்,
பெண் மனங்களின் மொட்டும்,
மலர்ந்து கொண்டு தான் இருக்கும்!!!

பல தடைகளைத் தகர்த்தெறிந்து,
ஞாலமே தள்ளாடும் அளவுக்கு,
பல துறைகளில், பெண் மலர்ந்து
விரிந்து கொண்டிருக்கிறாள்….
வீழமாட்டாள்!!

பல துறை என்றாலும்,
இறுதியில் உன் துணை என்றாகிறது….
பெண்ணிற்கு!
துணையை உறுதுணையாக்கி,
உதிரத்தை வியர்வையாய் மாற்றி,
விண்வெளி வரை வென்றாலும்,
பூத்த மலர் ஆணவம் நாடவில்லை….
ஆனந்தமே நாடுகிறது!!
இங்ஙனம் பெண் மலர்கள் பல,
மொட்டிட்டு விரிந்து கொண்டேயிருக்கிறது!!!

அடுப்பங்கரையில் ஜடமாக்கி,
அமைதியின் மூலம் அகிலத்தை வென்று,
ஆணவம் கொள்ளாமல், ஆனந்தம் கொண்டு,
கருவை உருத்தாங்கி,
உருவிலும் ‘ஆண் உருவே உன் கரு’,
என்ற கருத்தையும் கவனத்தில் கொண்டு,
காடேறி மலையேறி,
பலர் கவனத்தை ஈர்த்த மலரே “பெண் மலர்”
அத்தகைய மலர் பூக்கலாமே என்றல்ல,
பூத்துக் கொண்டு தான் இருக்கிறது…..
புன்னகையாலும், பல புதுமையினாலும்!!!!


சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா!!

சிவகாமி சிந்திக்கவில்லை…
வையம் போற்றும் வானகச் சொத்து,
என் வயிற்றில் தவழும் முத்துத் தானென!!

விருதுநகரின் விண்மீனே!!
மறக்கமுடியா மன்னவனே!!
வானேறினாலும் வையகத்தின் வாடாமாலையானவரே!!

பலரின் விதியை விரட்ட,
கல்வியை கண்ணுக்குள் திணித்தாயே…
தான் கல்வியில் விரியாவிடிலும் கூட!!!

அரசியல் ஆன்மிகத்தின் திங்கள் நீர்!!
ஓர் நிலவைப் போல் வேறோர் நிலவு இருந்திட முடியுமோ??
முடியா மக்களின் விடிவெள்ளி ஆனீரே!!
ஆதங்கத்தை ஆராயும் அறிஞன் ஆனீரே!!

மக்களை மனதார காத்தீர்….
மக்களால் மனதார கவரப்பட்டீர்….
காசு சேர்க்க செல்வந்தனாக!!!
தாயை தரிசிப்பீர்….
தரிசனமோ,,
சிவகாமி ஈன்ற காமராசனாகவே தான்….
காமராசர் களம் கண்ட அரசியல்வாதியாக அல்ல!!!

சாணக்கியனானாலும் சாதி பார்க்கா,
புனிதன் நீர்!!
நீதி திணரவில்லை உமதாட்சியில்!!!
தழைத்திருந்த தமிழகத்தை தூக்கினீர்!!

தாய்க்காக வைத்த தண்ணீர்க் குழாயை
தகர்த்திட்டீர்…..
தாயும், தமிழக மக்களும் எனது ஒருங்கிணைந்த சொத்தே என!!!

தளைத்தோங்கிய ஆட்சியில்,
உம் புகழ் மலைத்தோங்கியது!!!
உம் மனம் மட்டும் மாறவில்லை….
சிவகாமி மைந்தன் காமராசனாகவே
களம் கண்டது!!
அரசியல் ஆணவம் அறவே ஒளிரவில்லை!!!!

சிவகாமி செதுக்கிய முத்தும் ஒளிர்ந்தது இப்பாரினில்….
சிவகாமி அம்மையாரின் பெயரும் பெருமையானது…..
இவ்வாழியினில்!!!


வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர்கள்!!

வரலாறும் வானை எட்டியது….
மீட்டெடுத்த அறிஞர்களும் வரலாறாகினர்!!

ஆறாய் ஓடும் பாதையாய் மாறியது….
வரலாறு பேசும்,
வரலாற்றறிஞரின் வசந்த காலம்!!!

தானும் அறிஞராகி,
வரலாற்றிஞராகி,
வரும் காலமும் வரலாறு பேசும்
காலமாக அமைய,
காலம் கடந்தும், பேசும் அளவுக்கு,
அறிஞராக ஆதி அந்தம் ஆளும்
அச்சுக்களை ஆணித்தரமாக,
பேச்சாலும், செயலாலும் செய்து,
செழுமையான வரலாறாக அமைத்தனர்….
பல வலிகளைக் கடந்து!!!

காலூன்றி நிற்கும் வரலாறு,
ஏடுகளில் மட்டுமல்ல….
பலர் எண்ணங்களில்,
எழுத்தாணியாக
பல ஜகத்தாணிகள் தடம் பதிக்க,
வரலாற்றுத் தடம்
வானை எட்டியது!!!
எண்ணமுடியா பல அறிஞர்களாக!!
வரலாற்றிஞர்களாக!


அண்ணன்!!

தன் தங்கைக்கு இரண்டாவது தந்தை!!
தன் தங்கையை தனது ரத்தம் போன்று நேசிப்பவன்…
தன் ரத்தத்திற்கு ஓர் ஆபத்து எனத் தெரிந்தால்,,
துடித்து போய் விடுவான்!!….
சில இடங்களில் மெளனம் காப்பான்….
“இலை சிலுசிலுக்கிறது,,
மலையோ மெளனம் காக்கிறது”….

வலிமை மிக்கது எது???
அதுபோலவே, எனது ரத்தம்(அண்ணன்)
மலைக்கு ஒப்பானவன்!!
அண்ணன் தங்கை உறவு,
உயிரினும் மேலானது!!!! – kavithai thoguppu 65

– தே. லூவியா

You may also like...

1 Response

  1. Kavideviika says:

    அறிமுக கவிஞருக்கு மற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்