பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர், 18 சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர் – paambaatti siddar.

paambaatti siddar

மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.

பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி… அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே… என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!
என்று . உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

முகநூல் வழிச்செய்தி

மருதமலைக் காட்டிற்குள் இளைஞனொருவன் பாம்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவன் இடுப்பில் ஒரு மகுடி தொங்கி கொண்டிருந்தது. நல்ல வளர்ந்த பாம்பாக தேசி பிடித்து அதனுடைய விஷத்தை எடுத்து வைத்தியர்களிடம் விற்று விடுவான். வைத்தியர்கள் அந்த விஷத்தை மூலிகை சாறுகளுடன் கலந்து மருந்து தயாரிப்பார்கள். அந்த மருந்துகள் புற்று நோய் , குட்டரோகம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவார்கள்.

பாம்புகளைப் பிடிப்பதில் இளைஞன் கில்லாடி. அவன் மகுடிக்கு மயங்காத பாம்புகள் இல்லை. பாம்புகளைத் தேடி காடுகளில் அலைவதுதான் இளைஞனின் அன்றாடப் பணியாக இருந்தது. இருப்பினும் அவனுக்கு போதிய விஷம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு புற்றாக சிதைத்து அதிலிருக்கும் கூட்டிப் பாம்புகளைப் கொன்றுவிட்டு பெரிய பாம்புகளைப் பிடித்து விஷத்தை எடுத்து குப்பிகளில் அடைத்து கொள்வான். நூறு வயதான ராஜநாகத்திடம் நாகரத்தினம் என்றொரு ரத்தினம் இருக்குமாம்.

நாகரத்தினம்

அது கிடைப்பவனைத் தேடி உயர்ந்த செல்வங்களெல்லாம் ஓடிவருமாம். பேரரசர்கள் கூட அந்த மணி இருபவனைப் பணிவார்களாம். அது மட்டும் நமக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவனுக்குள் ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது. பாம்புகளைத் தேடுமொழுதில் நூறு வயது ராஜநாகம் கண்ணில் படாதா? படும் படும் என்றாவது ஒரு நாள் அந்த ராஜநாகம் கண்ணில் படும். அந்த ராஜநாகம் இடமே பிரகாசமாக இருக்குமாம். இந்த அடையாளத்தை வைத்து அந்தப் பாம்பைப் பிடித்துவிட்டால் , அந்த நாகரத்தினம் என் கைக்குள் வரும். அப்போது நான் உலகில் பெரும் செல்வந்தன் என்று எண்ணிக்கொள்வான்.

பாம்பை தேடி அலைகிறாய்

ஒரு நாள் காட்டிற்குள் பாம்புகளைத் தெடிக் கொண்டிருந்தபோது ஒரு புற்றிற்குள்ளிருந்து பிரகாசமான ஒளி வெளிப்பட்டு கொண்டிருந்தது. இளைஞனுக்கு ஆச்சரியம். நூறு வயது ராஜநாகம் வெளியில் வரும் போலிருக்கிறது. அது பறந்து செல்வதற்குள் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று மெதுவாக புற்றை அணுகினான். புற்றை உதறிக் கொண்டு முனிவர் ஒருவர் எழுந்தார்.

முன் ஜென்மங்கள் கண்ணில் தெரிந்தது

இளைஞன் ஆச்சரியம் அடைந்தான். முனிவரோ இளைஞனைப் பார்த்து என்ன? ராஜநாகம் என்று நினைத்து ஏமாந்து விட்டாயா? நாகரத்தினம் கிடைத்து விட்டால் உலகப் பணக்காரனாகி விடலாம் என்ற எண்ணமா? சரி அது கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்து விடுமா? என்றார். இளைஞன் தன்னையாரியாமல் அவரது கால்களில் விழுந்தான். ஐயா! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் மின்னுகிறதே என்று அதிசயித்தான்.

மகனே! இந்த உடல் அழிந்து போகும். பொன்னும் பொருளும் காணாமல் போகும். அழிய போகும் இந்த செல்வத்திற்காகவா நூறு வயது பாம்பை தேடி அலைகிறாய்? அதைவிட பெரும் செல்வம் தரும் பாம்பொன்று இருக்கிறது அறிவாயா? ஸ்வாமி அந்த பாம்பு எங்கே இருக்கிறது? முனிவர் சிரித்தார் – paambaatti siddar.

இன்னும் ஆசை அதிகமாகும் போலிருக்கிறதே. அந்தப் பாம்பு எங்கேயும் இல்லை. அது உன்னிடமேதான் இருக்கிறது என்றார் முனிவர். அப்படியா? ஏற்கனவே அதை நான் பிடித்து விட்டேனா? எங்கே இந்தக் கோணியில் இருக்கும் பாம்புகளில் அது இருக்கிறதா என்றவாறு பாம்புகளைப் போட்டிருந்த தன் கோணிப்பையை பிரித்தான். முனிவர் இப்பொது சத்தமிட்டு சிரிக்க ஆரம்பித்தார். ஏன் ஸ்வாமி சிரிக்கிறீர்கள்? மடையா அது உன்னிடம் இருக்கிறது என்றால் உன் உடலில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன். ஸ்வாமி குழப்புகிறீர்களே? இளைஞன் தலையை சொறிந்தான். வா என்னருகில் என்றார்.

இளைஞனே! உன்னை முறைப்படுத்தவே நான் வந்தேன். உன் எதிர்காலத்தை நான் அறிவேன். வா அருகே என்றார். அவரது குரலில் இருந்த வசியம் இளைஞனை இழுத்தத்து. அருகில் சென்று அவர் பாதங்களை பணிந்தான். சடேரென அவனது முதுகில் ஓர் அடிவிட்டார் முனிவர். இளைஞனின் முதுகுத் தண்டின் அடிபாகத்தில் சுருண்டு படுத்திருந்த குண்டலினி சக்தி என்ற நாகம் படமெடுத்து சீறி இளைஞனின் சிரசை நோக்கி விரைந்தது. இளைஞன் ஆனந்தத்தில் கூச்சலிட்டான். கதறி அழுதான். அவனது முன் ஜென்மங்கள் எல்லாம் அவன் கண்ணில் தெரிந்தது.

அரசனின் உடலுக்குள்

தன் எதிரே இருக்கும் முனிவர் சட்டை முனி என்ற மாபெரும் சித்தர் , சென்ற பிறவியில் அவரிடம் சேவையாறியதன் பலன் இந்தப் பிறவியில் என்னை ஆட்கொள்ள வந்திருக்கிறார் என்பதைத் தெளிந்தான். முனிவர் அவனை ஆசிர்வதித்தார். அவனை சீடனாக ஏற்றுக் கொண்டு சகலமும் அங்கேயேக் கற்று தந்தார். மகனே! நீ பாம்பாட்டிப் பிழைத்த வந்தபடியால் எல்லோராலும் பாம்பாட்டிச் சித்தர் என்றழைக்கப்படுவாய். மக்கள் சேவை புரிந்து இறைபடி சேர்வாய் என்று கூறி மறைந்தார் – paambaatti siddar.

பாம்பாட்டிச் சித்தர் என்றழைப்பட்ட இழைஞருக்கு அஷ்டமா சித்திகளும் கைகூடின. வானில் பறக்கவும் ஆற்றல் வந்தது. கல்லைத் தொட்டு அதை மணிகளாக்க முடிந்தது. அவர் நாகரத்தினத்தைத் தேடியது போய் இப்பொது அவர் கல்லைத் தொட்டாலும் அதை நாகரத்தினமாய் மாறியது. அனால் அவற்றின் மேலிருந்த ஆசைகள் அவரை விட்டு விலகின. ஒரு நாள் அவர் வான் வழியே சென்று கொண்டிருந்த போது , ஒரு நகரில் முந்திய இரவில் நகர்வலம் வந்த அரசனை பாம்பு தீண்டி இறந்து போய் கிடந்தான்.

அவனைச் சுற்றி நின்று அரசியும் , அமைச்சர்களும் , மக்களும் அழுது கொண்டிருந்தனர். அரசனைக் கடித்தப் பாம்பை அருகில் அடித்துப் போட்டிருந்தனர். பாம்பாட்டிச் சித்தர் அரசனின் உடலுக்குள் புகுந்தார். அரசன் உயிர் பெற்று எழுந்தான். ராணியோ பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அருகில் ஓடி வந்த ராணியை கைகாட்டி நிறுத்தி விட்டு பாம்பின் அருகில் சென்று பாம்பே எழுந்திரு என்றார். பாம்பு உயிர்பெற்று ஊர்ந்து ஓடியது. மக்கள் திகைத்தனர். உயிர் பிழைப்பது என்பது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா? ஆதி வாங்கி செத்தும் வாழும் ஆசை போகவில்லையா பாம்பே என்று பாம்பிடம் பேசிய மன்னனைக் கண்டு அரசி வியந்தாள். எப்போதும் அந்தப்புர அழகிகளிடமே மயங்கி கிடந்து ஆனதப்படும் அரசன் இப்படி தத்துவம் பேசுகிறானே , இவன் புத்தி பேதலித்து விட்டதா என்று வியந்தாள்.

மன்னா! இதென்ன அதிசயம் தாங்கள் எப்படி உயிர்பிழைத்தீர்கள்? பாம்பையும் உயிர்ப்பித்தீர்கள்? தாங்கள் உண்மையில் இப்பொது யார்? என்றாள். பெண்ணே உன் கணவனின் உடலில் இருக்கும் ஏன் பெயர் பாம்பாட்டி சித்தன். பெண்ணே இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. நிரந்திரம் என்பது இறைவனின் திருவடிகளே. பிறவிகள் தொடருகின்றன. எனவே இறப்பிற்காக அழ தேவையில்லை என்றார். பின்னர் சித்தர் மன்னரின் உடலிலிருந்து விடுபட்டார். சில காலம் அந்நகரில் தங்கியிருந்து பல பாடல்களை இயற்றினார். அவை பாம்பாட்டி சித்தர் பாடல்கள் என வழங்கப்பட்டன.

சங்கரன் கோயில்

நோய்களுக்கு மருந்துகள் தயாரித்து கொடுத்தார். பல வைத்திய நூல்களையும் இயற்றினார். சித்தர் ஆரூடம் என்ற ஜோதிட நுழையும் எழுதினார். பாம்பாட்டிச் சித்தர் பிறந்த ஊர் புதுக்கோட்டையின் அருகிலுள்ள கோகர்ணம் என்று கூறுகின்றனர். வருடங்களும் நாட்களும் வாழ்ந்து மறைந்த பாம்பாட்டிச் சித்தர் மறுத்த மலையில் சித்தி அடைந்தார் எனவும் , விருத்தாசலம் பழமலையில் சித்தியடைந்தார் எனவும் கூறுகின்றனர். இரண்டு இடங்களிலும் இவரது சமாதி உள்ளது. சங்கரன் கோயில் என்ற இடத்தில பாம்பாட்டிச் சித்தர் சமாதி அடைந்தார் என்பதற்கு தற்போது பல நூல் ஆதாரங்களை காட்டி நிரூபித்துள்ளனர் – paambaatti siddar.

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    ஆன்மீக பதிவு அருமை..

  2. Jothibai says:

    ஆன்மீகத்தில் தார்மீகப்பணி
    தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *