சதுரகிரி பெயர் காரணம்

சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.
சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி, இந்திர கிரி, சஞ்சீவி கிரியும், தெற்க்கே பிரம்மகிரி, சித்திகிரி, இராம கிரி, உதய கிரியும் இருக்கிறது – sathuragiri ragasiyam.

sathuragiri ragasiyam

தல வரலாறு

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டிற்க்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.

ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

சடதாரி

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு ‘சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சிவனை அடித்த பச்சைமால்

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான் – sathuragiri ragasiyam.

சிவபெருமான் அவனை தேற்றி, “நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் சிவாயநம ..என்றும் இறைபணியிள் சதுரகிரி சிவ கார்த்திக் ஓம்நமசிவாய சர்வம் சிவார்ப்பணம்.


சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

மகாலிங்கம்
சுந்தரமூர்த்தி லிங்கம்
சந்தன மகாலிங்கம்
இரட்டை லிங்கம்
காட்டு லிங்கம்

அபூர்வ மூலிகைகள்

சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

You may also like...

6 Responses

 1. மாலதி நாராயணன் says:

  சதுரகிரி ஆன்மீக தகவல்கள் மிகவும் அற்புதம் அதி அற்புதம்

 2. Kasthuri says:

  பயனுள்ள ஆன்மீக தகவல்.. நீரோடைக்கு நன்றி..

 3. தி.வள்ளி says:

  சதுரகிரி தல புராணம் அறியப்பெற்றது பெரும் பேறு.சித்தர் உலவும் தலம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அரிய.மூலிகை பற்றி அறிந்து கொண்டோம்.

 4. கு.ஏஞ்சலின் கமலா says:

  நல்லசெய்திகள்.

 5. Rajakumari says:

  சதுரகிரி பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளது மிக்க நன்றி

 6. R. Brinda says:

  சதுரகிரி மலை பற்றிய முழுத் தகவல்களையும் அறிந்து கொண்டோம்! நன்றி!