ஆகாயம் – ஒரு கவிப்பயணம்

நீரோடையின் இளம் கவிஞர் கி.பிரகாசு அவர்களின் வானில் சங்கமித்த (தொடரி) வரிகள் – aagayam kavithai.

aagayam kavithai

வானில் ஒளிரும் ஒளி வட்டம்
இருளாத சுடர் விளக்கு
கவிஞனின் கற்பனை மாயம்
கவிதையில் அழகு ஓவியம்
மழலையின் அன்பு பெயர்
சுட்ட கதை சுடாத வடைக்கும்
வாடமல் மலரும் “நிலா” – aagayam kavithai

கோபத்தின் உச்சகட்டம்
விடியலின் தூண்டுகோல்
ஆகாயத்தில் ஒரு அக்னி நட்சத்திரம்
மலர்ந்து துயில் கொள்வது ஆழ்கடலில்
புத்தரிசி படையலும் பொங்கல் அன்று மணக்கும்
என்றுமே செக்க சிவந்த ரோஜா “சூரியன்”

எல்லையில்லாத தேடல்
நட்சத்திரங்களின் வனம்
முகில்கள் தவிழ்ந்து விளையாடும் நந்தவனம்
பறவையின் சிறகுகளும் பரவசமாக சுற்றிவரும்
மதியின் முகம் வீச நான் படுத்து உறங்க
இடம் வேண்டும் “வானில்”…..

–  பிரகாசு.கி அவனாசி

You may also like...

6 Responses

 1. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  கவிஞரை வரிகள் எழுதச் சொன்னால் வாழ்ந்தே வந்துவிட்டார்..
  சிறப்பு 👌

 2. Rajakumari says:

  ஆகாயக் கவிதை நன்றாக இருக்கிறது

 3. தி.வள்ளி says:

  முகில்கள் தவழ்ந்து விளையாடும் நந்தவனம்…மிக அழகு வானம் மட்டுமல்ல..கவியின் வரிகளும்தான்.சகோதரர் பிரகாசு அவர்களுக்கு பாராட்டுகள்..

 4. Kavi devika says:

  அருமை. அற்புதம். கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ….

 5. மாலதி நாராயணன் says:

  கவிஞரின் வரிகள் மனதை தொட்டன
  வானத்தில் பயணிப்பது போல் இருந்தது

 6. R. Brinda says:

  கவிஞர் பிரகாஷ் அவர்களின் “ஆகாயம்” கவிதை மிக அருமையாக இருக்கிறது.