மருந்துக் குழம்பு

உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu.

marunthu kulambu

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
பாகற்காய் – சிறியது 100 gm.(அ)
பெரிய பாகற்காய் – 1 (வட்டமாக நறுக்கியது)
கடுகு மற்றும் உளுந்து
புளி – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 5
நல்லெண்ணெய் – ஒரு குழிக் கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

கறிவேப்பிலை, மிளகு, சீரகம் வெந்தயம் ஆகயவற்றை சற்று வறுக்கவும். அதனோடு மிளகாய் வற்றலையும் சேர்த்து வறுத்து கலவை இயந்திரத்தில்
பொடியாக்கிக் கொள்ளவும் – marunthu kulambu.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, புளி கரைசலைச் சேர்க்கவும்.

பாகற்காய் துண்டுகளை தனியாக வேகவைத்து புளி தண்ணீரோடு சேர்க்கவும்
கொதி வந்தவுடன் பொடி செய்துள்ளவற்றை சேர்த்து மீணடும் கொதிக்கவிட்டு கெட்டியான பின்பு இறக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

சுவையான ஆரோக்கியமான மருந்துக் குழம்பு தயார்.

இதில் அனைத்து மசாலா பொருட்களும் கலந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒன்று.

You may also like...

4 Responses

 1. Rajakumari says:

  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த மருந்து குழம்பு நன்றி

 2. R. Brinda says:

  உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான குழம்பு! அனைவரும் செய்து சுவைத்து மகிழ்வோம்!

 3. தி.வள்ளி says:

  சகோதரி ஏஞ்சலின் கமலாவின் மருத்துவ குணம் நிறைந்த இக்குழம்பு காலத்திற்குஏற்ற சத்துணவு..எளிதான செய்முறை மேலும் சிறப்பு

 4. மாலதி நாராயணன் says:

  மருந்து குழம்பு இன்றைய நிலையில் அற்புதமான மருந்தாகும்