கோதுமை சம்பா லட்டு – செய்முறை

நமது மக்களுக்கு பரிச்சயமானது (கடலை மாவில் தயாரிக்கப்படும்) பூந்தி லட்டு மற்றும் அதன் செய்முறை. பூந்தி லட்டு இடம்பெறாத விழாக்கள் இல்லை. இந்த பதிவில் நாம் கோதுமை சம்பா லட்டு செய்முறை பற்றி காண்போம் – gothumai samba laddu.

தேவையான பொருட்கள்

கோதுமை (சம்பா) ரவை – 250 கிராம்
எலக்காய் – 5
முந்திரி – 10
திராட்சை – தேவையான அளவு
நாட்டு சர்க்கரை – 250 கிராம்
தேங்காய் – துருவியது

செய்முறை

கோதுமை சம்பா ரவையை 5 மணி நேரம் தண்ணீரில் பிசைந்து ஊறவைக்க வேண்டும். அதை சிறு கைப்பிடி அளவு எடுத்து இட்லி சட்டியில் வேகவைக்க வேண்டும்.

ஊற வைக்கும் நேரம் (கோதுமை சம்பா ரவையை) குறைவு என்றால் அதை குக்கரில் வேக வைக்கவும் – gothumai samba laddu.

வேகவைத்ததை எடுத்து ஆறியவுடன் நாட்டு சர்க்கரை, திராட்சை மற்றும் ஏலக்காய் (நன்றாக நுணுக்கியது) சேர்த்து நன்றாக கலக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து, முந்திரி வைத்து பதித்து பரிமாறலாம்.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/aPmSpBOKOmM

You may also like...

1 Response

  1. Pavithra says:

    Nice and quick recipe