என் மின்மினி (கதை பாகம் – 9)

சென்ற வாரம் உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பதிலுக்கு பப்புவை பார்த்து கேட்டபடியே நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அச்சு – en minmini thodar kadhai-9.

en minmini kathai paagam serial

உன்னோட பெயர் முதலில் சொல்லு அப்புறம் என் பெயரை சொல்லலாமா வேணாமாணு நான் யோசிக்கிறேன் என்றாவறே
வெட்கத்துடன் சிரித்தாள் பப்பு…

பதிலுக்கு அதெல்லாம் முடியாது. நீ முதலில் சொல்லு என்று செல்லச்சண்டையிட்டவாறே ப்ளீஸ் சொலேன் என்று கொஞ்சம் அசடு
வழிந்தான் அச்சு…

சரி ஓகே நான் சொல்றேன். ஆனா சொன்ன பிறகு ஓ… சூப்பர்..உன் பெயர் உன்னைப்போல் அழகா தேவதை போலே இருக்கு
அப்படி இப்படிணு ரொம்ப புகழ்ந்து தள்ள கூடாது… என்று அடுக்கடுக்காக அள்ளிவிட்டாள் பப்பு…

ஐய்யோ உன் உண்மையான பெயரை கூட நீ சொல்லவேண்டாம்…எப்பப்பா..என்ன பேச்சு பேசறே…உனக்கு மனசாட்சியே
இல்லையா என்று நக்கலடித்தான் அச்சு…
ஹே என்ன??? கிண்டலா…
இனிமேல் என் பெயரை நான் எப்போதும் உன்கிட்டே சொல்லவே மாட்டேன் என்று பப்பு கோபமாகவே…
சரி சரி டென்ஷன் ஆகாதே… முதலில் நானே என் பெயரை சொல்றேன் ஓகேவா என்றான் அச்சு….
ம்ம் சொல்லு சொல்லு என்றாள் பப்பு…
என்னோட பெயர் பிரஜின்… எப்படி இருக்கு.புடிச்சுருக்கா என்றான் பப்பு…

உன் பெயரை இப்போ யாரு கேட்டங்களாம்.நீ சொல்லட்டுமா கேட்ட நான் ம்ம் சொல்லுணு சொன்னே.. அத்துக்குபோயி
பிரஜின், விர்ஜின்ணு போவீயா என சலித்தபடி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தனது டிபன்பாக்ஸ்யை மூடி வைத்து விட்டு நான்
கிளம்புறேன் என்று தன் நடிப்பான கோபத்தை காட்டிவிட்டு டிபார்ட்மெண்ட்யினை நோக்கி நடந்தாள் பப்பு

ஹே உன் பெயரை சொல்லிவிட்டு போயேன்…ப்ளீஸ் என்றவாறே அவள் பின்னால் நடந்து சென்றான் அச்சு…
அவன் பின்னாடி கெஞ்சியபடி நடந்து வருவதை கூட ஒரு பொருட்டாக எண்ணாமல் கால் போன போக்கிலே நடந்தாள் பப்பு…
ச்சே என்ன இவள் இப்படி இருக்கா… விளையாட்டுக்கு கூட ஜாலியா பேச முடியவில்லையே என்று மனம் வெறுத்து அவளை
மீண்டும் ஒரு முறை பார்த்தான் அச்சு…

சென்று கொண்டிருந்தவள் சட்டென திரும்பி தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு கண்ணை அடித்து விட்டு தனது
டிபார்ட்மெண்ட்ன்னுள் நுழைந்தாள்…

இதை கொஞ்சமும் எதிர்பாக்காதவன் ஐய்யோடா…… என தன் நெஞ்சை பிடித்தபடி மண்ணையும் விண்ணையும் பார்த்தபடியே
பல்லை இழித்தான்… – en minmini thodar kadhai-9

பாகம் 10-ல் தொடரும்

You may also like...

5 Responses

 1. R. Brinda says:

  அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

 2. தி.வள்ளி says:

  பிரஜின்..ஒரு வழியாக அச்சு பெயர் தெரிந்தது…நாயகி பெயர் எப்போது தெரிவிக்கப் போகிறார் ஆசிரியர்?

 3. ராஜகுமாரி போருர் says:

  அச்சு அடுத்து என்ன செய்ய போகிறான் காத்துக்கொண்டு இருக்கிறோம்

 4. Ushamuthuraman says:

  அச்சு என்ன செய்து கதையில் என்ன திருப்பம் வர்ம போகிறது என்று ஆவலை அதிகமாக்கிய அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

 5. Vijay says:

  Super intrested and special this story