சுரைக்காய் அடை (சமையல்)
சமையல் வல்லுநர் தி. வள்ளி அவர்கள் வழங்கிய சுவையான அடை செய்முறை பற்றி வாசிப்போம் – suraikai adai seimurai
தேவையானவை
- புழுங்கல் அரிசி 2 கப்
- பச்சரிசி கால் கப்
- கடலைப்பருப்பு அரை கப்
- துருவிய சுரைக்காய் ஒரு கப்
- மிளகாய் வற்றல் 4 -6
- மஞ்சள் பொடி 1/4ஸ்பூன்
- காயப் பொடி1/4 ஸ்பூன்
- பெல்லாரி (நறுக்கியது)-1
- கறிவேப்பிலை கொஞ்சம்
- வெள்ளை உளுத்தம்பருப்பு 4 ஸ்பூன்
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு ,வெள்ளை உளுத்தம் பருப்பு ,நான்கையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற விடவும். பின் அரவை இயந்திரத்தில் இட்டு அத்துடன் மிளகாய் வற்றல், மஞ்சப்பொடி, காயப்பொடி , துருவிய சுரைக்காய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து வழிக்கவும்.சுடும் போது நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும்.சுரைக்காயை அடை மிருதுவாக இருக்கும். பருப்புகள் அதிகம் சேராததால் வயதானவர்களுக்கு கூட எளிதில் செரித்துவிடும்.சக்து மிக்கதும் கூட – suraikai adai seimurai.
– தி.வள்ளி, திருநெல்வேலி
அருமை. எளிமை. நல்ல உணவு செய்முறை. நான்செய்து பார்க்கிறேன்