வார ராசிபலன் சித்திரை 05 – சித்திரை 11

சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal apr-18 to apr-24.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். எதிலும் நிதானமாக செயல்படவும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் தன்னிறைவு ஏற்படும். விருந்தினர் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் மத்தியில் குழப்பங்கள் வரலாம். வியாபாரிகள் அதிக அலைச்சலை  சந்திக்க நேரிடும். கலைஞர்கள் கடின உழைப்பை செயல்படுத்த  வேண்டும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படவும். விவசாயம் சுமாராகவே காணப்படும். 
பரிகாரம்: செவ்வாய் கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். நீங்கள் நினைத்தவை நடக்காமல் போகலாம். மக்கள் மத்தியில் மனக்கசப்பு வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு நிலவும். பணியாளர்கள் வீண் அலைச்சல் அடைவார்கள். வியாபாரத்தில் போட்டி மனப்பான்மை உருவாகும். கலைஞர்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் லாபம் உயரும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனம் நிறைவு அடையும். அடுத்தவர் பேச்சை கேட்க வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும்.  வியாபாரத்தில் போட்டிகள் உருவாகலாம். கலைஞர்கள் வெற்றியைக் காண்பார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தின் தேவைகள் பூர்த்தியடையும். 
பரிகாரம்: திங்கட்கிழமை சிவ வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும், எதிலும் நிதானம் தேவை. முடிவில் வெற்றியைக் காண்பீர்கள். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சராசரி லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டாம். மாணவர்கள் மனதில் நல்ல சிந்தனை பிறக்கும். விவசாயத்தில் நஷ்டமே எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். ஆயுள் குறைவு நிவர்த்தி அடையும். புதிய நண்பர்கள் வசம் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே வாக்குவாதம் வேண்டாம். அண்டை வீட்டார் மத்தியில் சச்சரவுகள் வரலாம். பணியாளர்கள் வீண் அலைச்சல் எதிர்கொள்வார்கள். வியாபாரிகள் இடையூறுகளை சந்திப்பார்கள்.  கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவமணிகள் தெளிவான மனநிலையில் இருப்பார்கள். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக காணப்படும். உங்கள் மனதில் ஒரு சில மாற்றங்கள் வரலாம். வெளியூரில் தங்க வாய்ப்புகள் உள்ளன. ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் கடுமையாக உழைக்க நேரிடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கலைஞர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். மாணவர்கள் கடுமையாக உழைக்க நேரிடும். விவசாயத்தின் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு நன்றாக அமையும். குடும்பத்தை அனுசரித்து போகவும். பெண்கள் வசம் கவனமாக செயல்படவும். பணியாளர்களுக்கு கடின உழைப்பு தேவை. வியாபாரத்தில் சிக்கல் தீரும். கலைஞர்கள் ஏற்றம் அடைவார்கள். மாணவர்கள் வெற்றியைக் காண்பார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் அதிக துன்பத்தை எதிர் கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செய்யவும். வருமானம் சுமாராகவே காணப்படும். நண்பர்களால்  இடையுறுவரலாம். பணியாளர்கள் பணியில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதையும் தாமதமாக செயல்படுத்துவீர்கள். கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். விவசாயத்தில் சிறு பிரச்சனைகள் வரலாம். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு திருப்தி அளிக்கும். சுற்றுவட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும், எதிலும் நிதானமாக செயல்படவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பணியாளர்கள் எதையும் அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் ஆலோசனை கேட்க வேண்டாம். கலைஞர்கள் நல்ல உத்திரவாதம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதையும் பலமுறை ஆராய்ந்து செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் கவனமாக செயல்படவும் குடும்பத்தை அனுசரித்து போகவும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் எதிர்காலம் பற்றி சிந்திப்பார்கள். விவசாயிகள் நன்மை அடைவார்கள்
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மாரியம்மன் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனதில் நல்ல ஆற்றல் பிறக்கும். அருகாமையில் நல்ல மரியாதை இருக்கும். அடுத்தவர் உதவி கிடைக்கும். மனதில் நிம்மதி காண்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகள் நல்ல முடிவு எடுப்பார்கள். கலைஞர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். அடுத்தவர் செயலால் அவதிப்படுவீர்கள். ஆயுதங்களால் வேலை செய்யும்போது கவனம் தேவை. செலவுகள் சற்று உயரும், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணியாளர்களுக்கு அதிக வேலை அதிகரிக்கும். வியாபாரத்தில் சற்று கவனமாக செயல்படவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள். விவசாயத்தில் சராசரி வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது rasi-palangal apr-18 to apr-24

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    அந்தந்த ராசிக்குரிய வழிபட வேண்டிய தெய்வம் பற்றிய குறிப்பு மிகவும் பயனுள்ளது நன்றிகள் பல அய்யாவுக்கு.

  2. தி.வள்ளி says:

    அந்தந்த ராசிக்குரிய வழிபட வேண்டிய தெய்வம் பற்றிய குறிப்பு மிகவும் பயனுள்ளது நன்றிகள் பல அய்யாவுக்கு.