பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 4

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4

bharathiyar puthiya aathichudi

செய்வது துணிந்து செய்

நீ செய்யும் செயல்களின்
இறுதியான விளைவது
வெற்றியோ தோல்வியோ
என்பதல்ல நம் எதிர்பார்ப்பு
துணிந்து செய்த பின்னர்
தோல்வி என்றாலும்
நமது அனுபவம் பாடமன்றோ


சேர்க்கை அழியேல்

பழகிய ஒருவரின் பண்பது மாறிட
அவரை அடியோடு விலக்குதல்
அவசியமன்று இன்றில்லை
எனின் எதிர் நிறை
காலமதில் இனிமை
தரு நற்செயல் வருமென
எதிர்பார்திருப்ப தவறல்ல


சைகையில் பொருளுணர்

சைகை என்றொரு சங்கேத
மொழி வார்த்தையில்லாத
எண்ண மொழி உரைப்பது
யாவும் உள்ளத்து கிடக்கை
உயிரென கலந்த இருவர்
இடை பிறர் அறியாதொரு
இதய மாற்றமே


சொல்வது தெளிந்து சொல்

நீ சொல்லும் சொல்லின்
சிறப்பால் பிறர்க்கு ஈவது
நன்மை பெருமை இனிமை
என்றிருந்தபோதிலும் அது
தெளிந்த நன்நீரோடை என
இயல்பாய் நடை போட்டே
இருப்பதும் மிகச்சிறப்பே


சோதிடந்தனை யிகழ்

சோதிட தூய நற்சாத்திரதே
தளைகள் பல வளர்ந்தே
நிற்பதை ஆழநோக்குதல்
அறிவார்ந்த ஒழுக்கம் என
ஆயினும் அதன் விளவுகள்
ஏதுமின்றி வீண்செயலென
ஆக இகழல் சரிதானாம்


சேர்க்கை அழியேல்

பழகிய ஒருவரின் பண்பது
மாறிட அவரை அடியோடு
விலக்குதல் அவசியமன்று
இன்றில்லை எனின் எதிர் நிறை
காலமதில் இனிமை
தரு நற்செயல் வருமென
எதிர்பார்திருப்ப தவறல்ல


சைகையில் பொருளுணர்

சைகை என்றொரு
சங்கேத மொழி வார்த்தையில்லாத
எண்ண மொழி உரைப்பது
யாவும் உள்ளத்து கிடக்கை
உயிரென கலந்த இருவர்
இடை பிறர் அறியாதொரு
இதய மாற்றமே


சொல்வது தெளிந்து சொல்

நீ சொல்லும் சொல்லின்
சிறப்பால் பிறர்க்கு ஈவது
நன்மை பெருமை இனிமை
என்றிருந்தபோதிலும் அது
தெளிந்த நன்நீரோடை என
இயல்பாய் நடை போட்டே
இருப்பதும் மிகச்சிறப்பே


சோதிடந் தளை யிகல்

சோதிட தூய நற்சாத்திரதே
தளைகள் பல வளர்ந்தே நிற்பதை
ஆழநோக்குதல்
அறிவார்ந்த ஒழுக்கம்
மட்டுமின்றி தளைகளை
களையதலன்றி
இகழல் வேண்டாமே – bharathiyar puthiya aathichudi 4


சௌரியம் தவறேல்

சௌரியமென்பது
உடல் மொழியல்ல
யாதென வினவின் வீரம் என்பதே
அதன் பொருளாகும்
என்ப வேண்டுமிடத்தே வீரம் தன்
வேலை இதுவென காட்டல்
வேண்டும்தானே

– மா கோமகன்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    பாரதியாரின் புதிய ஆத்திசூடியும்,அதற்கு திரு மா. கோமகன் அவர்களின் விளக்கமும் அருமை ..