மின்னிதழ் மார்ச் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh march 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்:  சே.சண்முகவேல் 

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்
நீரோடையின் 1000 வது பதிவு

கவிதை தொகுப்பு

சிறுவாணி சிட்டு என்ற புனைப்பெயரில் கவிதை எழுதி வரும் அ.செந்தில்குமார் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம். 

கொங்கு சமையல் - கத்தரிக்காய் சுண்டாங்கி

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 4
வ.மிளகாய் – 4
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு.
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:
கத்தரிக்காயின் மீது சிறிது எண்ணெய் தடவி காம்பு நீக்காமல் நான்காக பிளந்து, சிறிது உப்பு தடவிக் கொள்ளவும்.
கத்தரிக்காயை தீயில் நன்றாக வாட்டி எடுத்து சூடு ஆகிய பின் தோல் நீக்கிக் கொள்ளவும்.
மிளகாயை மைகோதியில் கோர்த்து மிதமான தீயில் வாட்டி கொள்ளவும்.
கத்தரிக்காய், மிளகாய், புளி,தேவையான அளவுக்கு உப்பு சேர்ந்து அரைக்கவும்.
இப்போது களிக்கு தொட்டுக் கொள்ள சுவையான கத்தரிக்காய் சுண்டாங்கி தயார்.
 – ஆனந்தி, சூலூர்

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 4
சி.வெங்காயம் – 50 கி
வ.மிளகாய் – 4
பூண்டு – 5
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

கத்தரிக்காயை ஆவியில் வேகவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய்,பூண்டு மஞ்சள் தூள்,கறிவேப்பிலை,புளி,உப்பு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கிய பின் தோல் நீக்கிய கத்தரிக்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது களிக்கு தொட்டுக் கொள்ள சுவையான கத்தரிக்காய் சுண்டாங்கி தயார்.
 – ஆனந்தி, சூலூர்

மார்ச் மாத ராசி பலன்கள்

இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எதை செய்தாலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கலைஞர்களுக்கு கடன் பிரச்சனை இருக்காது. மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பழைய எதிர்ப்புகள் முடிவுக்கு வரும். பண வரவு சற்று உயரும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் பணியில் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் சக கலைஞர்களை அனுசரித்து போகவும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டுவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும். 
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார். இந்த வாரத்தில் பிரயாணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு வாகன யோகம் ஏற்படும். உங்கள் பிள்ளைகள் நன்கு உயர்வடைவார்கள். ஒரு சிலர் வீண்பகைக்கு ஆளாவார்கள். பணியாளர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள். வியாபாரம் நன்கு ஏற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். விவசாயத்தில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். எதிலும் வெற்றியே கிடைக்கும். புதிய தகவல் வந்து சேரும். பூர்வீக சொத்து விவகாரம் நன்மை பயக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். வியாபாரம் நன்கு விரிவடைய வாய்ப்புகள் உள்ளன. கலைஞர்கள் நிதானமாக செயல்படவும். மாணவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் அதிக நன்மை கிடைக்கும்.
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையை செய்வார். செலவுகள் சற்று குறைய வாய்ப்புகள் உள்ளன. பணவரவு திருப்திகரமாக அமையும், எதையும் சற்று யோசித்து செயல்படவும். வெளியூர் பயணமாக யாத்திரைகள் செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் அதிக வேலை செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் அதிக அலைச்சல் உருவாகலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கடினமாக படிக்கவும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 
பரிகாரம்: அன்றாடம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிலும் முன்னேற்றம் காணலாம். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் நல்ல ஆதரவு தருவார்கள். சுப செய்தி ஒன்று வர வாய்ப்புகள் உள்ளன. மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுதலை பெறுவீர்கள். எதையும் விட்டுக் கொடுத்துப் போகவும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் வரலாம். கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும். விவசாயம் கால்நடை வளர்ப்பதன் மூலம் புதிய வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குடும்ப உறுப்பினர் மத்தியில் சற்று அனுசரித்து போகவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். வியாபாரத்தில் பழைய குழப்பங்கள் இருக்காது. மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் வருவாய் உயரும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் புதன் பகவான் நன்மையை செய்வார். தங்கள் திறமையால் எதையும் செய்து முடிப்பீர்கள். உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. பிள்ளைகள் கட்டுப்படாமல் போக வாய்ப்புகள் உள்ளன. குடும்ப பிரச்சினைகளளை பொறுமையாக சமாளிக்கவும். பணியாளர்கள் உங்கள் பணியை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் தொழில் நன்கு சிறப்பாக அமையும். மாணவர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய நண்பர்கள் இணைவார்கள், சற்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தர்ம காரியங்கள் செய்யவும். பணியாளர்கள் எதையும் சிந்தித்தோ செயல்படவும். வியாபாரத்தில் பழைய தடைகள் இருக்காது. கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் அண்டை விவசாயிகள் மத்தியில் ஒற்றுமை இருக்காது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதை செய்தாலும் கவனமாக செயல்படவும். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வரலாம். நண்பர்கள் உதவி செய்ய வாய்ப்புகள் உள்ளன. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் உயர் அதிகாரியின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்காது. கலைஞர்கள் மக்கள் மத்தியில் நடுநிலை வகிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதத்தில் ராசி கட்டத்தில் கிரக அமைப்புகள் சிறப்பாக இருப்பதால் நன்மையே நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். எதையும் சாதிப்பீர்கள், பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணியாளர்கள் பணியில் அதிக கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் வியாபாரிகள் மத்தியில் திடீர் நெருக்கடிகள் வரலாம். கலைஞர்கள் எதிலும் நிதானமாக செயல்படவும். மாணவர்கள் நவீன கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். விவசாயத்தில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். திடீர் செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. தேவையற்ற முயற்சிகளை செய்ய வேண்டாம். குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்து போகவும். பணியாளர்கள் பிரச்சனை ஏதும் இல்லாமல் அமைதியாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் வியாபாரிகள் மத்தியில் போட்டிகள் உருவாகலாம், சற்று கவனம் தேவை. கலைஞர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். மாணவர்கள் எதிர்கால திட்டங்களை வகுப்பர். விவசாயத்தில் 100% லாபம் அடைய வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி வழிபாடு செய்து வரவும்.
 
 – முத்துசாமி அஞ்சல்துறை ஓய்வு

You may also like...