அப்பாவுக்கு பிறந்தநாள்
ஆண் பிள்ளை வேண்டுமென்று
சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும்
என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று
தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே
ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal.

சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு
இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும்
தந்தையாய், குருவாய், நண்பனாய்
நின்தன் தியாகம் சமுத்திரத்தின்
நீளத்தையும் மிஞ்சுமே!
விரல் பிடித்து நடை பழக்கி
என் மழலைப் பேச்சே சொர்க்கம் என்று
ஊர்ப் பெருமை பேசி!
மழலை பேச்சு முதல் மங்கையாய் பேசியதுவரை
என்னுடன் பயணித்து, நித்தம் என்தன்
முன்னேற்றம் பற்றி சிந்திக்கும்
நின் தியாகத்திற்கு என் முன் ஜென்மங்களை
சமர்ப்பித்தாலும் ஈடாகாது.
கலாச்சாரம் கற்றுக்கொடுத்தீர்,
பண்பாடு பயிற்றுவித்தீர்,
விருந்தோம்பல் வளர்த்தீர்,
விடுகதைகள் விளையாட்டானது,
சுடும் வெயில் வெறும் வெளிச்சமானது,
கலங்கத் தெரியாதவளாய் – இல்லை
கலங்காத மனம் படைத்தவளாய்
வளர்த்த பக்குவம் தங்களை சேரும்.
இப்பிறவி தந்த தங்களுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.