பிரிவு – அனாதைச் சிறுமியின் உளறல்கள்
தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai
நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் ..
முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன்
பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே…
உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம்
தாய் மடி உறக்கம் தந்தவள் ஆனால் என்
உறக்கங்கள் தொலைக்கும் பிரிவை தந்து விட்டாயே ! ! !
என் உணர்வுகளை கடந்து செல்கிறாய்
உன் உலர்களை மூடி மறைத்து கொண்டு ! ! !
உருவங்களின் மேல் தோற்றம் இல்லை உன் மேல் கொண்ட அன்பு
சொர்க்கம் தாண்டி வென்ற உள்ளத்தின் தோற்றம் அது ..
ஆனால் நீ வெறும் கானல் நீராய் என்னை ஏமாற்றிக் கொண்டே ! ! !
நம் உறவின் அர்த்தங்கள் தேடி சொர்க்கத்தில்
தொலைந்த என்னை நரகத்தில் கண்டெடுத்தேன்
உனைப் பிரியும் நேரமிதில் …………..
உருவங்கள் பிரிந்தாலும் உணர்வுகள் தொலைந்து போவதில்லை.
pirivu kavithai
– நீரோடைமகேஷ்