எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும்

பட்டம் நீ என்று கூறினாய்.

என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.!
உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி
கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ.

எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை.
மற்றவர் மனதில் நீ வாழும் கணம்
என்னில் நெளிந்த பாம்புகளின் விடம்,
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றபடியே.

enakkaagave nee vendum

எனக்காக நீ வாழாத கணம், நீ எனும்,
நெருப்புத்துண்டுகள் நிறைந்த கூடாரத்தில்
அடைக்கப்பட்ட பறவை நான்.
சிறகுகள் ஓய்ந்தாலும், நான் பறக்க மறந்தாலும்
இழப்பு என்னவோ எனக்கு மட்டும்.

எனக்காகவே நீ வாழ்வதென்றால் இந்த ஜென்மத்தை தொடர்வேன்,
இல்லையென்றால் என் எந்த ஜென்மத்திற்கும் நீ இல்லை.

தனியாக வாழத்தொடங்கி, ஜென்மத்தை முடிக்காமல்,
ஒரு வழிப் பாதையில் இந்த அமரர் ஊர்தி.

– நீரோடைமகேஸ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *