சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே

என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன்,
என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன்,
சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின்
அறைகளை அடைந்து நினைவுகளை
தேடலாம் என்று பயணித்தேன்..
ஆனால்
நான் பயணித்த என் இரத்த நாளங்கள்
அதன் பாதையை மாற்றிக்கொண்டது……
நான் என் இதயம் சேராமல் இருக்க ? ? ? ? ?
காரணங்களை ஆராய்ந்த போது,,
தங்கையே உன் மரணத்தால் என் இதயம்
நிலநடுக்கத்தின் நிகழ்வுகளாய் இருந்தது …..

sagithukkolla mudiyavillai sagothariye

கண்ணீரில் உன்னை தேடும் மகேஷ்….
03/10/2010
“சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே ”

உலகை மறந்தாலும் என் எண்ணம் எனும் கரைதனில்
அலைகளாய் துள்ளி விளையாடும்

என் சகோதரி “கோமதி” க்கு சமர்ப்பணம்.

sagithukkolla mudiyavillai sagothariye

 – நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. கவிதை உண்மையை சொன்னால் ஆழ்ந்த அனுதாபங்கள். பிரிவு வலிக்கும்.