இளைய சமுதாயப் பறவைகளே

விண்ணை முட்டித்தள்ள சிறகெனும் வாள் கொண்டு
பறக்கத் துடிக்கும் இளைய சமுதாயப் பறவைகளே, சற்று
திரும்பிப் பாருங்கள் ilaiya samuthaaya paravaigale.

ilaiya samuthaaya paravaigale

கட்டி முடிக்காப்படாத கோபுரத்தின் உச்சியில்
அமரத்துடிக்கும் பறவை போல,
மரத்தின் கிளை தனை விடுத்து, அதன் நிழலில் கூடுகட்டி
வாழத் துடிக்கும் பறவை போல ,
ஒரு காலத்தில் நான் துடித்த அவசரங்களை சொல்கிறேன்
சில நிமிடங்கள் உங்கள் பார்வைகளை என் வரிகளில்
அடகு வைய்யுங்கள் ……

சுமைகளை ஏற்றி செல்ல உங்கள் சிறகு ஒன்றும்
சுமைதாங்கி இல்லை ..
உங்கள் அர்த்தமற்ற ஆசைகளும் சுமைதான்…
நேற்றைய தூக்கத்தின் மிச்சங்களை சேர்த்து
வைக்காமல் இரவின் இருட்டிலேயே தொலைத்து
விடுங்கள் …
நிரந்தர உறக்கத்தில் உறங்கிக்கொள்ளலாம் …..

ilaiya samuthaaya paravaigale

– நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. ''..உங்கள் அர்த்தமற்ற ஆசைகளும் சுமைதான்…''
    ஆகையால் அருத்தமுடன்(அர்த்தமுடன்) ஆசைப் படுங்கள் என்கிறீர்கள். நல்லது. இளைய சமுதாயம் கேட்கட்டும்.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com